பக்கம்:சமுதாய வீதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 6 சமுதாய வீதி

கதாநாயகியாயிருக்கிற கழைக்கூத்திக்கு 'கம்ல வல்லி"ன்னு பேர் வச்சிருக்கே, கதாநாயகன் கதாநாயகி யைக் கூப்பிடற எல்லாக் கட்டத்திலியும் கமலவல்லி!' 'கமலவல்லி'ன்னு முழுப்பெயரையும் நீட்டி இழுத்துச் சொல்லிக் கூப்பிடறத்ாகவே வகுது. கமலா'ன்னு கூப்பிடறதா மாத்தினா நல்லது. கூப்பிடறதுக்கு அழ காகவும் சுருக்கமாகவும் வாய் நெறையவும் இருக்கும்.’’

கூடாது! கமலவல்லின்னுதான் கூப்பிடணும்.' ஏன்? கமலா'ன்னுன்னு கூப்பிட்டா என்ன?”

இது சரித்திர நாடகம் 'கமலவல்லி'ங்கிற பெய ரைக் கமலா ன்னு சுருக்கிக் கூப்பிடறப்பவே ஒரு சமூக நாடகத் தன்மை வந்துடும்.'

உனக்கு ஏன் புரியப் போகுது?' என்று முத்துக் குமரன் பதிலுக்கு வினவியபோது கோபால் முகம் சிவந் தான். தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந் தான். ஆயினும் ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண் டிருந்தது. முத்துக்குமரன் கோபாலுக்காக எதையும் மாற் நவோ விட்டுக் கொடுக்கவோ இல்லை. வசனத்திலும், நடிப்பிலும், ஒத்திகையிலும், தான் கூறுவதைக் கண்டிப் பாக வற்புறுத்தினான் அவன். முதல் நாள் ஒத்திகையில் வேறு அதிகமான தகராறுகள் எவையும் கோபாலுடன் முத்துக்குமரனுக்கு ஏற்படவில்லை. மாதவியோ கோபா லுக்கு முன் புலியைக் கண்ட மான் போல் பயந்து நடுங்கி னாள். அவளையும் வைத்துக்கொண்டே கோபாலிடம் கடுமையாகவோ அளவு மீறியோ பேசுவதற்கு முத்துக் குமரன் தயங்கினான். முந்திய தினத்தன்று இரவு கோபால் பையனிடம் எழுதிக் கொடுத்தனுப்பியிருந்த கடிதம் நினைவு வந்து அவனை ஒரளவு தயங்கச் செய்தது. கோபால் அசம்பாவிதமானவையும் அபத்தமானவையு மான கேள்விகளைக் கேட்கும்போதெல்லாம் அவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/118&oldid=560915" இலிருந்து மீள்விக்கப்பட்டது