பக்கம்:சமுதாய வீதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 சமுதாய வீதி

கவனித்தான். அவளுடைய வேண்டுகோளில் நிறைந் திருக்கும முன்னெச்சரிக்கையும் தற்காப்பும் அவனுக்குப் புரிந்தன. அவளுடைய அந்த முன்னெச்சரிக்கையே அவள் உண்மையில் தனக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிய வைத்தாலும், குழந்தைத்தனமான மழலைத் தன்மையுடனும் பெண்மைக்கே உரிய பேதமை யுடனும் அவள் அதைத் தன்னிடம் வேண்டியதையும் அவன் உணர்ந்தான். அவனுக்குப் பெருமையாகவும் இருந்தது. அவளை எதிர்க்க வே ண் டு ம் போலவும் இருந்தது; அவளைக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது; அவளுக்கு அபயமளித்துத் தழுவிக் கொள்ள வேண்டும் போ ல வ ம் இருந்தது. அவன் மறுபடியும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் கண்கள் இன்னும் அவனை இறைஞ்சிக் கொண்டு தான் இருந்தன. .

4 O

அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே முத்துக் குமரன் கூறலானான்:

' என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு பெரிய சக்கரவர்த்திக்கு நடுங்குகிற மாதிரி நீங்களெல்லாம் கோபாலுக்கு நடுங்குகிறீர்கள்-'

'சமூகத்தின் மேற்படிகளில் பணம் படைத்தவர்களும் புகழ் படைத்தவர்களும் தான் சக்கரவர்த்திகளாக இன் னும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது!"

எந்தச் சக்கரவர்த்திகளுக்கும் எங்கேயும் நடுங்கிப் பழக்கமில்லை எனக்கு. ஏனென்றால் நானே என்னை ஒரு ச க் க ர வ ர் த் தி யாக நினைத்துக் கொண்டிருப் ե-13:1a5r.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/126&oldid=560923" இலிருந்து மீள்விக்கப்பட்டது