பக்கம்:சமுதாய வீதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 14.5

நீகூட ரொம்ப நல்லா நடிச்ச மாதவீ. இப்படி வாய் விட்டுப் புகழறது எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. நீ அதைச் செய்யத் தொடங்கிவிட்டதுனாலே நானும் செய்ய வேண்டியிருக்கு...'

"நல்லா இருக்கிறதை நல்லா இருக்குன்னு சொல்றது கூடத் தப்பா என்ன?’’

"இந்தக் காலத்திலே ரொம்ப மோசமா இருக்கிற தைத்தான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு அழுத்தி அழுத்திச் சொல்றாங்க. அதனாலே நிஜமாகவே நல்லா யிருக்கிற ஒண்ணைப்பத்தி நாம எதுவுமே சொல்லாம இருக்க வேண்டியிருக்கு.'

"இருக்கலாம்! ஆனா எனக்கு, உங்களை எல்லாரும் புகழறதைக் கேட்டாலே சந்தோஷமா இருக்கு. இருபத்தி நாலு மணி நேரமும் உங்களை யாராவது புகழமாட்டாங் களான்னு நான் கேக்கறதுக்கு ஏங்கிட்டிருக்கேன்.'

-இப்படிக் கூறியபோது அவள் குரலில் தாபமும் தாகமும் நிறைந்திருந்தது. அவள் ஜீவகளை ததும்புகிற வாலிபப் பருவத்துக் கவிதையாய் அவனருகே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்களின் வசீகரமான ஒளி, இதழ்களின் கனிவு, எல்லாம் தோன்றித் தோன்றி அவனை மயக்கின. அருகே நெருங்கி நின்ற அவள் மேனி யின் நறுமணம் அவனுடைய நாசியை நிறைத்துக் கிறு கிறுக்கச் செய்தது. கூந்தல் தைலத்தின் வாசனையும், சாதிப்பூவின் மனமும், பவுடர் கமகமப்பும் பரப்பிய விறு விறுப்பில் அவன் கிறங்கினான். நெகிழ்ந்து வரும் ஒர் இனிய சங்கீதத்தைப் போல் அவள் அழகுகள் அவனை. வசப்படுத்தின. அவளைத் தாவி இழுத்து இறுக அனைத் துக் கொண்டான் அவன். கொய்து சூடிக்கொள்ள முடிந் தவளின் கைகளுக்குள் இலகுவாக நெகிழ்ந்து போய் விழும் ஒரு குழைந்த பூவைப்போல் அவனுடைய தழுவலில் இருந் தாள் அவள். அவன் காதில் பூ உதிர்வதுபோல் அவள் குரல் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/145&oldid=560942" இலிருந்து மீள்விக்கப்பட்டது