பக்கம்:சமுதாய வீதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 சமுதாய வீதி

இங்கே பட்டிணத்தில் நான் அதிகமாகப் பார்க்கிறேன். இது இந்தக் காலத்தைப் பிடிச்சிருக்கிற நோய் போலி ருக்கு.'

'நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்கப் பத்து வருசத் துக்கு முன்னாடியே நான் உங்களைச் சந்திச்சிருக்க ணும்னு தோணுது.” - -அவள் குரல் கம்மிப் போய் வந்தது. அதிலிருந்த கழிவிரக்கத்தை அவனும் உணர்ந்தான். அவளுடைய நெகிழ்ந்த குரல் அவன் உள்ளத்தை உருக்கியது. அவன் அவள் முகத்தைப் பார்த்தபடி சில விநாடிகள் ஒன்றும் பேசத் தோன்றாமல் இருந்து விட்டான். அவள் அவனைக் கேட்டாள் :

'இப்ப, நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க...' "எங்கிட்ட ஏன் கேட்கிறே?" 'உங்ககிட்டத்தான் கேட்கணும். அவரு சொன்னபடி நான் இப்பவே அப்துல்லாவைப் பார்க்கப் போறதில்லை. வேணுமானா சாயங்காலம் கூப்பிடப் போகலாம்னு இருக்கேன். அதுவும் நான் தனியாப் போகப் போறதில்லே, உங்களையும் கூட்டிக்கிட்டுப் போகப் போறேன்.'

"நானா? நான் எதுக்கு?’’ ' எங்கூட நீங்க வராமே வேறே யார் வருவாங்க?'இந்த வாக்கியத்தைக் கேட்டு முத்துக்குமரனுக்கு மெய் சிலிர்த்தது.

12

ஒரு பெண்ணின் நளினம் என்பதே தன் அன்பை அவள் அழகாகவும், சாதுரியமாகவும் வெளியிடுவதில்தான் இருக் கிறதோ என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/152&oldid=560949" இலிருந்து மீள்விக்கப்பட்டது