பக்கம்:சமுதாய வீதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置52 சமுதாய வீதி

'நீ நாடகத்துக்குக் கதாநாயகி, நீ போகாட்டி நாடகமே நடக்காது. அதனாலே நீ போய்த்தான் ஆகணும்.'

கதாநாயகரே வராட்டாக் கதாநாயகி போய் என்ன பிரயோசனம்?’’

கோடால்தான் வர்ரானே.'

"நான் கோபாலைப் பத்திப் பேசலை, இப்ப என் னோட கதாநாயகரைப் பத்திப் பேசறேன்.'

"அது யாரு?" "தெரிஞ்சு உணர்ந்து வேணும்னே - கேட்க lங்க இதை, அப்பிடித்தானே?"

அவள் தன்னையே ஆத்மார்த்தமான கதாநாயகனாக வரித்துப் பேசும் அந்தப் பேச்சைக் கேட்டு உள்ளம் பூரித்துப் பேசத் தோன்றாமல் மெளனமாயிருந்தான் அவன். அதன்பின் சிறிது நேரத்தில் அவள் கூப்பிட்ட தற்கு மறுப்பு எ து வு ம் சொல்லாமல் அவளோடு போட்டோ ஸ்டுடியோவிற்குச் ெச ன் ற | ன் அவன். போட்டோ ஸ்டுடியோவில் பாஸ்போர்ட்டுக்காக படம் எடுத்து முடிந்ததும், அவள் விரும்பியபடியே அவளும் அவனும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள்.

மாலையில் அப்துல்லாவை அழைத்துவர ஒஷியானிக் ஹோட்டலுக்குப் பு ற ப் பட் ட .ே பா து அவன் மன நிலையை அறிந்து அவள்-தனியே செல்லவில்லை. காரில் அவனையும் உடனழைத்துக் கொண்டே புறப்பட்டாள். அவனும் அவளும் புறப்பட்ட கார் பங்களா காம்பவுண் டைத் தாண்டி வெளியேறுவதற்குள்ளேயே கோபால் இன்னொரு காரில் எதிரே வந்து விட்டான். அவள் அப்போதுதான் அப்துல்லாவை அழைத்துவரப் போகி றாள் என்று புரிந்து கொண்ட கோபமும், தான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி தனியே போகாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/154&oldid=560951" இலிருந்து மீள்விக்கப்பட்டது