பக்கம்:சமுதாய வீதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 1 5 5

"எல்லாம் சாரோட பெருமைதான். நாடகத்தை அவ்வளவு நல்லா எழுதியிருக்கிறதினாலேதான் நாங்க-- நடிச்சிப் பேர் வாங்க முடியுது...' என்றாள்.

'இருந்தாலும் நடிக்கிறவங்க திறமைதானே எழுதற வங்களுக்குப் பெருமையைத் தேடித்தரும், என்ன நான் சொல்றது. புரியுதில்லே?" என்று அப்துல்லா தான் சொல்லியதையே மேலும் வற்புறுத்தினார்.

முத்துக்குமரன் விவாதத்தில் கலந்து கொள்ள விரும் வில்லை. ஆணி அடித்தாலும் இறங்காமல் காய்ந்த மரம் போலாகிவிட்ட சில வியாபார ஆசாமிகளிடம் கூடிய வரை கலையைப் பற்றிப் பேசுவதையே தவிர்க்க விரும் பி னா ன் அவன். அப்துல்லாவைப் பொருட்படுத்தி அவரோடு கலையைப் பற்றி விவாதிப்பதே கலைக்குச் செய்கிற துரோகம் அல்லது பாவம் என்று கருதிய வனாகக் கால்மேல் கால் போட்டபடி அவன் சும்மா உட்கார்ந்திருந்தான். அவன் அப்படி மனோபாவத்தில் இருப்பதை மாதவியும் புரிந்து கொண்டாள். அப்துல்லா வின் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவன் .

'போன் மாதம் கங்கா நாடகக்குழு’ மலேயாவுக்கு வந்திருந்தாங்களே? அவங்ககூட உங்க காண்ட்ராக்ட்லே’ தான் வந்தாங்க போலிருக்கு? அவங்களுக்கு அங்கே நல்ல பேர்தானுங்களா?' '

'அப்துல்லா காண்ட்ராக்ட்’னாலே பேரு தானே வராது! எங்க கம்பெனி இருபத்தஞ்சு வருசமா தமிழ் நாட்டு நாட்டியக்காரங்க, நாடகக் கலைஞர்களை மலேயா வரவழைச்சு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கு. இதுவரை நாங்க ஏற்பாடு பண்ணி மலேயாவிலே எதுவும் சோடை போனதில்லை. சும்மா பெருமைக்கு சொல்றதா நீங்க நினைக்கப்பிடாது, நம்ம பேருக்கே அப்பிடி ஒரு ராசி உண்டு.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/157&oldid=560954" இலிருந்து மீள்விக்கப்பட்டது