பக்கம்:சமுதாய வீதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. , பார்த்தசாரதி 芷59

துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போவே' என்று சிறிது கடு மையாகவே பதில் கூறிவிட்டான் கோபால். மாதவிக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. ஆனால், அந்தத் தொல்லை தன்னைவிட்டுப் போனதற்காக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தாள் அவள். வேறு யாரோ ஒரு துணை நடிகையோடு கோபால் அப்துல்லாவை ஒட்டலுக்கு அனுப்பி வைப்பதை அவளே கண்டாள். அவள் பேசாம லிருந்து விட்டாள். அப்துல்லா எல்லாரையும் நோக்கிக் கைகூப்பிவிட்டுப் புறப்பட்டார்.

சாப்பிட்டு முடிந்ததுமே முத்துக்குமரன் அவுட் ஹவுஸுக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் பங்களாவின் ஃபோர்டிகோவில் மற்றவர்களை வழியனுப்ப நின்று கொண்டிருந்தாள். திரும்பக் கொண்டு. போய்விடுவதற்காக தான் அப்துல்லாவோடு தனியே போய் விடுகிறேனோ, இல்லையா என்பதைச் சோதனை செய்வதற்காகவே, அவர் அவுட்ஹவுஸுக்கு அவசர அவ சரமாகப் போயிருக்க வேண்டுமென்று மாதவி நினைத்துப் புரிந்து கொண்டாள். தான் தனியே அப்துல்லாவைத் திரும்பக் கொண்டு போய்விடப் போகாதது முத்துக்குமரி னுக்குத் திருப்தி அளிக்கும் என்ற மகிழ்ச்சியோடுதான் அப்போது அவள் அங்கே நின்றிருந்தாள்.

ஒவ்வொருவராகக் கோபாலிடம் சொல்வி விடை பெற்றுக்கொண்டு புறப்படத் தொடங்கினர். மாதவியிட மும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். அவள் கைகூப்பி விடை கொடுத்தாள். எல்லோரும் சொல்லிக் கொண்டு போனபின்பு வீட்டில் வேலை பார்ப்பவர்கள், கோபாலின் செகரெட்டரி, மாதவி ஆகியோர்தான் அங்கே மீதமிருந் தனர். நாயர்ப்பையன் டெலிபோன் அருகே அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தான். திடீரென்று அத் தனை பேர் முன்னிலையிலுமாகக் கோபால் மாதவியிடம் சீறத் தொடங்கினான். அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அவனிடம் வெளிப்படத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/161&oldid=560958" இலிருந்து மீள்விக்கப்பட்டது