பக்கம்:சமுதாய வீதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வர வரப் பெரிய பத்தினியாயிட்டே உனக்குத் திமிர் அதிகமாயிருக்கு. ரெண்டு மூணு மணிக்கே அப்துல்லா கிட்டப் போயிட்டு அவரோட கொஞ்ச நேரம் பேசிக்கிட் டிருந்துட்டு அப்புறம் அவரைக் கூட்டிக்கிட்டு வான்னு நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். நான் சொன்ன தைக் காதிலேயே வாங்கிக்காமே என்னென்னமோ பண்ணியிருக்கே. இது எல்லாம் கொஞ்சங்கூட நல்லா இல்லே. வாத்தியார் இந்த வீட்டுக்கு வந்தப்புறம் உன் போக்கே மாறியிருக்கு. நானும் பார்க்கத்தான் பார்க் கிறேன்.' -

மாதவி பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள். ஆனால் அவளுக்கு கண் கலங்கிவிட்டது. முன்பெல்லாம் நாலுபேர் முன்னிலையிலே கோபால் இப்ப்டிப் பேசினா அம் அவளுக்கு உறைக்காது; உறைத்ததில்லை. துடைத் தெறிந்து விட்டு மறுபடி அவனோடு பழகத் தொடங்கி விடுவாள். இப்போது அவள் யாருக்கு ஆட்பட்டிருந் தாளோ அவனிடமிருந்த மானமும், ரோஷமும், அவளுள் ளேயும் கிளர்ந்திருந்ததனால் அப்படித் துடைத்தெறிந்து விட்டு அவளால் இருக்க முடியவில்லை. அவளுக்கு நெஞ்சு குமுறியது. பழக்கத்தின் காரணமாக அவளால் கோபாலை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பெல் லாம் இப்படி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள் ளாமல் மரமாக நின்றதுபோல் நிற்காமல் இன்று அவள் மனம் கொதித்தாள். பத்து நிமிஷத்திற்கு மேல் கோபம் திரக் கத்தித் தீர்ந்தபின் கோபால் உள்ளே சென்றான். அவள் ஏறக்குறைய முகம் சிவந்து கோவென்று கதறியழு கிற நிலைக்கு வந்துவிட்டாள். நேரே அவுட்ஹவுஸுக்கு

விரைந்தாள் அவள் ; நடுவே டிரைவர் வந்து, 'ஐயா உங்களை வீட்டிலே கொண்டு போயி டிராப் பண் னிட்டு வரச்சொன்னாரு...' என்றான். கோபாவிடம்

காட்டத் தவறிய கோபத்தை அந்த டிரைவர் மேலே காட்டினாள் மாதவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/162&oldid=560959" இலிருந்து மீள்விக்கப்பட்டது