பக்கம்:சமுதாய வீதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 夏领董

"அவசியமில்லை! நீ போய் உன் வேலையைப் பாரு,

எனக்கு வீட்டுக்குப் போயிக்கத் தெரியும்...'

சரிங்க... ஐயாகிட்டச் சொல்லிடறேன்...'

அவன் போய் விட்டான். அவுட்ஹவுஸில் நுழையும் போதே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. முத்துக்குமரனைப் பார்த்ததும் அவள் அழுதே விட் டாள். விக்கலும், விசும்பலுமாக அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே அவன் மார்பில் வாடிய மாலையாக சாய்ந்துவிட்டாள் அவள்.

என்ன? என்னது? என்ன ஆச்சு? யார் என்ன சொன் னாங்க? எதுக்காக இப்படி?- முத்துக்குமரன் பதறி னான். சில நிமிஷங்கள் அவளால் பேசவே முடிய வில்லை. வெளிப்படும் வார்த்தைகளை அழுகை உடைத் தது. அவளைத் தழுவிக் கொண்டு ஆதரவாக அவள் கூந்தலை நீவினான் அவன். மெல்ல மெல்லப் பேசும் நிதானத்துக்கு வந்தாள் அவள்.

"நான் வீட்டுக்குப் போகணும். பஸ் நேரம் முடிஞ்சி போச்சு. டாக்விக்கு எங்கிட்டப் பணம் இல்லே. நீங்க துணைக்கு வர்ரதா இருந்தா நடந்தே போகலாம். வேற யாரும் எ ன க் கு த் து ைண இல்லை. நான் அநாதை...' .

"என்ன நடந்திச்சு? ஏன் இப்படிப் பேசறே? நிதானமா நடந்ததைச் சொல்லு.'

'நான் பத்தினி வேஷம் போடறேனாம். அப்துல்லா வைக் கூட்டியாறத்துக்கு நான் தனியாப் போகலையாம். நீங்க வந்தப்புறம் என் நடத்தையே மாறிப் போச்சாம்...'

யார் சொன்னா? கோபாலா?"

வேறு யார் சொல்லுவாங்க இப்படி எல்ல்ாம்?"

-முத்துக்குமரின் கண்களில் கோபம் சிவந்தது. சில:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/163&oldid=560960" இலிருந்து மீள்விக்கப்பட்டது