பக்கம்:சமுதாய வீதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சமுதாய வீதி

விநாடிகள் அவன் பேசவே இல்லை. சிறிது நேரத்துக்குப் பின் அவன் வாய் திறந்தான்.

சரி! புறப்படு. உன்னை வீட்டிலே கொண்டு போய் விட்டு வரேன்...' -

முத்துக்குமரன் அவளை அழைத்துக் கொண்டு தடந்தே புறப்பட்டான். பங்களா காம்பவுண்டைக் கடந்து அவர்கள் இருவரும் வெளியேறுவதற்குள்ளேயே கோபால் வந்து வழி மறைத்துக் கொண்டான்.

டிரைவர் வந்து சொன்னான். நீ ஏதோ ரொம்பக் கோபிச்சுக்கிட்டுச் சொல்லியனுப்பிச்சியாம். நான் ஒண் ணும் தப்பாப் பேசிடலை. எவ்வளவோ பேசியிருக் கோம், பழகியிருக்கோம்; இப்பல்லாம் உனக்கு உடனே ரோஷம் வந்திடுது. ரோஷத்தையும், கோபத்தையும் காட்டற அளவுக்கு என்னை அந்நியனாக்கிட்டா, நான் அப்புறம் ஒண்ணுமே சொல்லறதுக்கில்லே

மாதவி அவனுக்குப் பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள். முத்துக்குமரனும் பேசவில்லை. கோபால் கைகளைத் தட்டி யாரையோ அழைத்தான். டிரைவர் காரை எடுத்து வந்து மாதவியினருகே நிறுத்தினான். இந்த நிலையில் அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்று முத்துக்குமரன் அமைதியாக நின்று கவனிக்க லானான்.

ஏறிக்கொள், வீட்டில் போய் இறங்கிக் கொண்டு காரைத் திருப்பி அனுப்பு. என்னை மனச்சங்கடப்படக் செய்யாதே' என்று கோபால் கெஞ்சினான். மாதவி முத்துக்குமரனின் முகத்தை என்ன செய்வதென்ற பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அதைக் கவனிக் காதது போல் வே .ெ ற, ங் கோ பராக்குப் பார்க்கத் தொடங்கினான். .

"நீ சொல்லு வாத்தியாரே! மாதவி ബമേക്കേ அநாவசியமாகக் கோவிச்சுக்கிட்டிருக்கு. ச மர த n ன ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/164&oldid=560961" இலிருந்து மீள்விக்கப்பட்டது