பக்கம்:சமுதாய வீதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 157

தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக் குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடி யாமல் இருந்தது.

அன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத் துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாவின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்கு மர னிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார் களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவ :ளுக்குத் தோன்றியது. ஒர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்புபோலத் தவித்தது. முத்துக் குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி எண் ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந் தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ் சுரம் அவளுக்கு இல்லை.

ஜனவரி முதல் வாரத்திலிருந்து மூன்று வார காலம் மலேயா -சிங்கப்பூரில் சுற்ற வேண்டுமென்று ஏற்பாடாகி யிருந்தது. முத்துக்குமரன் உடன் வராமல் தான் மட்டும் தனியாக கோபாலுடன் வெளியூரில் சுற்றுவதற்குப் பயப் ப்ட்டாள் அவள். வாழ்க்கையில் முதன் முதலாகச் சமீப காலத்தில்தான் கோபாலிடம் இப்படிப்பட்ட வேற்றுமை யும் பயமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/169&oldid=560966" இலிருந்து மீள்விக்கப்பட்டது