பக்கம்:சமுதாய வீதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置6& சமுதாய வீதி

கோபாலின் பங்களாவில் வேலை செய்யும் நாயர்ப் பையனை அந்தரங்கமாக ஃபோனில் கூப்பிட்டு, மலேயா வுக்கு வசனகர்த்தா சாரும் வருவாரில்ல? அவர் வர்ராரா இல்லியாங்கிற விவரம் உனக்குத் தெரியுமோ?' என்று: செய்தி அறிய முயன்றாள் மாதவி. பையனுக்கு அந்த விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதற்குமேல் அவனை வற்புறுத்தி விசாரித்தால் 'அவரோட ஃபோன்ல. பேசிக்கங்கம்மா’’ என்று லயனை அவுட்ஹவுஸுக்கே போட்டாலும் போட்டு விடுவான் என்று தோன்றியது. முத்துக்குமரனோடு பேசச் சொல்லி லயனை அவுட்ஹவு ஸ்-க்குப் போட்டால்-அவனோடு என்ன பேசுவது? எப்படிப் பேசுவதென்ற பயமும் கூச்சமும் அவள் மனத்தில் அப்போதும் இருந்தன.

"என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று முத்துக்குமரனிடம் கேட்டுவிட்டு கோபாலுடன் புறப் பட்டு வந்துவிட்ட குற்றம் அவள் மனத்திலேயே குறுகுறுத் தது. அடுத்த நாளும், 'உடம்பு செளகரியமில்லை' என்ற பெயரில் அவள் மாம்பலத்துக்குப் போகவில்லை.

"அவசரமில்லை! உடம்பு சரியானதும் வந்தால் போதும்' என்று கோபால் ஃபோன் செய்தான். அவள் எதிர்பார்த்த ஃபோன் மட்டும் வரவேயில்லை. தானே போன் செய்து முத்துக்குமரனைக் கூப்பிடத் தவித்தாள் அவள். ஆனால் பயமாயிருந்தது. அவனோ பிடிவாதமாக அவளுக்கு ஃபோன் செய்யாமலிருந்தான். அவனோட பேசாத நிலையில் அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அவுட்ஹவுஸில் அவனுடைய கைக்கெட்டு கிற தொலைவு அருகிலேயே ஃபோனிருந்தும் அவன் தன் னோடு பேசாதது அவளை ஏங்கித் தவிக்கச் செய்தது. கோபாலிடம், 'உடம்பு செளகரியமில்லை' என்று புளுகிய தையும் மறந்து புறப்பட்டுப் போய் நேரிலேயே முத்துக் குமரனைச் சந்தித்து விடலாமா என்றுகூடத் துடிதுடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/170&oldid=560967" இலிருந்து மீள்விக்கப்பட்டது