பக்கம்:சமுதாய வீதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - J 35

கலைஞர்களுடன் கோபால், மாதவி, முத்துக்குமரன் அனைவருமே கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர், கோபால் குழுவினர்-தங்கள் கலைப் பயணத்தை வெற்றி கரமாக நடத்திக்கொண்டு வரவேண்டுமென்று வாழ்த்துக் கூறினார்.

நாள் நெருங்க நெருங்கத் தெரிந்தவர்கள் வீட்டில் விருந்து, வழியனுப்பு உபசாரம் என்று தட புடல்கள் அதிகமாயின. சிலவற்றில் முத்துக்குமரன் கலந்து கொள்ள வில்லை, ஒருநாள் மாலை மாதவியே அவனை ஒரு விருந் துக்கு வற்புறுத்தினாள். தனக்கு மிகவும் சிநேகிதமான ஒரு நடிகை கொடுக்கிற வழியனுப்பு உபசாரம் விருந்து அது என்று அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்வியும் அவன் போகவில்லை. விமானத்தில் பயணம் புறப்பட வேண்டிய தினத்திற்கு முந்திய நாள் இரவு-முத்துக்குமர னையும், கோபாலையும் தன் வீட்டிற்குச் சாப்பிடக் கூப் பிட்டிருந்தாள் மாதவி.

முத்துக்குமரன் விருந்துண்ண இருந்த தினத்தன்று மாலையிலேயே மாதவியின் வீட்டுக்கு வந்துவிட்டான், மாலையில் காபி சிற்றுண்டி கூட அங்கேதான் சாப்பிட் டான். அவளும் அவனும் அன்று மிகப் பிரியமாக உரை யாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே சிறு சிறு நட்சத்திரங்களோடு கூடிய கறுப்பு நிறப் ப ட் டு ப் புடவையை அன்று அவள் அணிந்திருந்தாள். அவளு டைய மேனியின் பொன் நிறத்தை அந்தப் புடவை நன்கு எடுத்துக் காட்டியது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவ ளுடைய கோலத்தைப் புகழ்ந்து அவன் ஒரு கவிதை வரி கூறினான்: .

"இருளைப் புனைந்துடுத்தி

இளமின்னல் கடந்துவரும்-'

அந்தக் கவிதை வரி அவளை மிக மிக மகிழச் செய்தது. 'ரொம்ப அழகாகப் பாடி என்னைப் பிரமாதமாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/187&oldid=560986" இலிருந்து மீள்விக்கப்பட்டது