பக்கம்:சமுதாய வீதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 9 3

நேரம் அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேல் இந்திய நேரத்திற்கும் அதற்கும் வித்தி யாசமிருந்தது. பிரயாணிகள் உடனே கைக்கடிகாரங் களைச் சரிசெய்து கொண்டார்கள்.

விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி யது . மீனம்பாக்கத்தில் புறப்படும்போது உதவி செய் தது போலவே முத்துக்குமரன் nட் பெல்ட்டைக் கட்டிக் கொள்வதற்கு மாதவி உதவி செய்தாள்.

சிறிதும் பெரிதுமாக அந்த நிலைய ரன்வேயில் அங் கங்கே நின்ற விமானங்களைப் பார்த்தபோது ஒரே பிர மிப்பாயிருந்தது. அபிமான நட்சத்திரங்களைப் பார்க்க நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பால்கனியிலும் கூட்டம் கூடியிருந்தது. அப்துல்லா வரவேற்றார். ஏரா ளமான மாலைகள். விமான நிலைய லவுஞ்சிலே மாதவி யும் கோபாலும் டெலிவிஷனுக்கு ஒர் இண்டர்வ்யூ கொடுத்தனர். ரசிகர்கள் ஆட்டோகிராப் வேட்டைக்கு மொய்த்தனர்.

முத்துக்குமரனுடைய பெயரோ வருகையோ அதிக மாக விளம்பரப்படுத்தப்படாததால் மாலை, வரவேற்பு, தடபுடல் கூட்டம் எல்லாம் கோபாலைச் சுற்றியும் மாத வியைச் சுற்றியுமே இருந்தன. முத்துக்குமரனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. தன்னை உலகுக்கு விளம் பரப்படுத்திக் கொள்ளாதவன் தடபுடலான வரவேற்பை எதிர்பார்ப்பது நியாயமில்லைதானென்று தோன்றியது அவனுக்கு. நட்சத்திர அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு உள்ள 'கிளாமர் இப்போதுதான் பட்டினத்துக்கு வந்து கோபாலின் தயவில் நாடகம் எழுதத் தொடங்கியிருக்கும் தனக்கு-அதுவும் அந்நிய தேசத்தில்-இருப்பதற்குக் காரணமில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் தனது தோற்றப் பொலிவின் காரணமாகத் தன்னையும் ஒரு நடிகனைப் பார்ப்பதுபோல் எல்லாரும் உற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/195&oldid=560994" இலிருந்து மீள்விக்கப்பட்டது