பக்கம்:சமுதாய வீதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 195

"எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கு, இந்த ஊர் ரொம்ப நல்லா இல்லே?"

"ஊர் மட்டுமென்ன? நீ கூடத்தான் இன்னிக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே. உன்னைப் பார்க் கிறப்ப ஒரு வனதேவதை மாதிரியிருக்கு.'

1. ஏது ரொம்பப் புகழlங்களே?’’ "ஏதாவது கிடைக்காதான்னுதான்...'

அவளுடைய வலது கை வீட் பின்புறமாகப் பின்

னால் மாலைபோல் வளைந்து அவனுடைய வலது தோள்

பட்டையைத் தடவிக் கொடுத்தது.

ரொம்ப சுகமாயிருக்கு.'

'இது ஏரோப்ளேனாக்கும்! உங்க அவுட் ஹவுஸ் இல்லே! இஷ்டம் போலல்லாம் இருக்கிறதுக்கு

"நீ பேசறதைப் பார்த்தா அவுட்ஹவுசுக்கு நீ வந்தப்ப எல்லாம் நான் ஏதோ என் இஷ்டம்போல நடந்துகிட் .டதாவில்லே ஆகுது.'

'தப்பு: தப்பு: எனக்கும் இஷ்டம்தான் ராஜாஎன்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி. முத் துக்குமரன் அவளை வேறொரு கேள்வி கேட்டான்:

கப்பல்லே புறப்பட்டவங்கள்ளாம் இன்னிக்குப் பினாங்கிலே கரையிறங்கியிருக்கணுமில்லே?"

இல்லே! நாளைக் காலையிலேதான் வந்து சேரு வாங்க. அவங்களுக்கெல்லாம் நாளைக்கு முழு ரெஸ்ட். நம்ம மூணு பேருக்கும் நாளைக்கு ப்ரோக்ராம் லைட் வnயீங். நாளன்னிக்கித்தான் முதல் நாடகம்.'

  • எங்கெங்சே எல்லாம் நாடகம்

ஏற்பாடாகியி ருக்கு?'

'முதல் நாலு நாள் பினாங்கிலே நாடகம். அடுத்த ரெண்டு நாள் ஈப்போவில் நாடகம். அதற்கடுத்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/197&oldid=560997" இலிருந்து மீள்விக்கப்பட்டது