பக்கம்:சமுதாய வீதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197

'அது எனக்குத் தெரியும்! ரெண்டு மனசும் ஒண்ணு தானே?”

"கேக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குவசிஷ்டரு வாயாலேயே பிரம்ம ரிஷின்னு வந்திரிச்சு...”*

எதைச் சொல்றே?’’

உங்க வாயாலேயே நாம ரெண்டு பேரும் ஒண் ணுன்னு ஒப்புக்கிட்டதைச் சொல்றேன்...”

-வாயினால் பேசுவதை நிறுத்திவிட்டு அவளை அப் படியே ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

அந்த நேரம் பார்த்து அப்துல்லாவும் கோபாலும் வந்து சேர்ந்தார்கள். - . -

மாதவி! சார் உங்கிட்டக் கொஞ்சம் பேசனுமாம், கொஞ்சம் அப்பிடி முன்வnட் பக்கமா வாயேன்" என்று அப்துல்லாவைக் காண்பித்துக் கண்களைக் குறும்புத்தன மாகச் சிமிட்டி அவளை அழைத்தான் கோபால். அவள் முத்துக்குமரனின் முகத்தைப் பார்த்தாள்.

"கொஞ்சம் மன்னிச்சுக்க வாத்தியாரே! என்று கோபால் முத்துக்குமரனையே வேண்டினான். ஏதோ அவ. னுடைய உடமையை ஒரு விநாடி இரவல் கேட்பதுபோல் கோபாலின் குரல் கெஞ்சியது. அவன் ஏன் தன்னை அநுமதி: கேட்கிறானென்று முத்துக்குமரனுக்கும் ஆச்சரியமா யிருந்தது. அவன் கண்ணைச் சிமிட்டி அழைத்த விதம் கோப மூட்டுவதாகவும் வெறுப்பூட்டுவதாகவும்கூட இருந் தது. கோபால் கேட்டதற்கு ஏற்றாற்போல் மாதவியும் முத்துக்குமரன் வாய் திறந்து போயிட்டு வாயேன்” என்று சொன்னாலொழிய வீட்டிலிருந்து எழுந்திருக்க மறுப்ப வள் போல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு. உட் கார்ந்திருந்தாள். அப்துல்லாவின் முகம் கடுமையாகியது.

3، 1 سسته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/199&oldid=560999" இலிருந்து மீள்விக்கப்பட்டது