பக்கம்:சமுதாய வீதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 சமுதாய வீதி

அவர் கனமான குரலில் ஆங்கிலத்தில், "ஹ" இஸ் ஹீ டு ஆர்டர் ஹெர்? வொய் ஆர் யூ அன்னெஸஸ்ஸரிலி ஆஸ்க் கிங் ஹிம்’ என்று கோபாலை இரைந்தார்.

போயேன்! ஏதோ இங்கிலீஷ்லே கத்தறான் மனு வடின்' என்று மாதவியின் காதருகே கூறினான் முத்துக் குமரன். அடுத்த நிமிஷம் மாதவி செய்த காரியம் முத்துக் குமரனையே திகைக்க வைப்பதாயிருந்தது.

'நீங்க போங்க, சித்தே பொறுத்து அங்கே வரேன். சாரிட்டப் பேசிக்கிட்டிருந்த பேச்சை முடிச்சிட்டு வந்திட றேன்' என்று அப்துல்லாவுக்கே பதில் கூறினாள் அவள், கோபாலின் முகமும் கடுமையாகியது, இருவரும் கேபின் பக்கமாக நடந்தார்கள். அவர்கள் விமானத்தின் முன் வரிசை இருக்கைகளை நோக்கி நகர்ந்ததும்,

'போயிட்டுத்தான் வாயேன்...வந்த இடத்திலே எதுக்கு வம்பு!" என்று மீண்டும் கூறினான் முத்துக்குமரன், மாதவிக்கு உதடுகள் துடித்தன.

'நான் போயிருப்பேன், ஆனா அவன் இங்கிலீஷ்ல என்ன சொன்னான் தெரியுமா?’’ * என்ன சொன்னான்?' 'இவளுக்குக் கட்டளையிட அவன் யாரு? அவனை ஏன் கேக்கிறேன்னு கோபாலிட்ட உங்களைப் பத்திச் சொன்னான் அவன்.'

"அதிலே தப்பென்ன? அவன் சொன்னது வாஸ்தவம் தானே?"

அவள் இதழ்கள் இரத்தப் பூக்களாகச் சிவந்து துடித் தன, கண்களில் ஈரம் கசிந்தது. தன்னை வேற்றுமைப் படுத்தி அவன் விளையாட்டுக்காகப் பேசினாலும் அவ ளால் அதைத் த்ாங்கிக் கொள்ள முடிவதில்லை.

"நான் அப்துல்லாகிட்டப் போகப் போறது இல்ல்ே" என்று உதடு துடிக்கச் சொல்லிவிட்டுக் கையைக் கட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/200&oldid=561000" இலிருந்து மீள்விக்கப்பட்டது