பக்கம்:சமுதாய வீதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சமுதாய வீதி

டுப் பார்க்காமலே அப்துல்லா இருந்த nட்டை நோக்கி நடந்தாள் அவள். முத்துக்குமரன் தனிமையை உணராம. விருப்பதற்காக மாதவி உட்கார்ந்திருந்த nட்டில் கோபால் உட்கார்ந்து கொண்டு-அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

அதுல பாரு வாத்தியாரே; அப்துல்லா ஒரு குஷால் பேர்வழி. நல்ல பணக்காரன், ஒரு நட்சத்திரத்தோட பக்கத்திலே உட்கார்ந்து பேசிப்பிடனும்னு உயிரை விடறான். கொஞ்சம் பொம்பளைக் கிறுக்கும் உண்டு: போய் உட்கார்ந்து பேசினாக் கொறஞ்சா போயிடும்? அவனோட காண்ட்ராக்ட்ல தானே இந்தத் தேசத்துக்கே வந்திருக்கோம்? இதெல்லாம் மாதவிக்குப் புரியமாட்டேங்: கிறது! முழுக்கப் புரியலேன்னும் சொல்ல மாட்டேன். ரொம்ப சூட்டிகையான பொண்ணு அவ. புத்திசாலி, கண்ணசைச்சாலே அர்த்தம் புரிஞ்சிக்கிறவதான். வாத்தி யார் இங்க வந்தப்புறம்தான் ஒரேயடியா மாறிப் போயிட்டா. முரண்டு. கோபம், உதாசீனம் எல்லாமே. வந்திருக்கு...”

'அவ்வளவும் என்னாலேதான் வந்திருக்காக்கும்?"

'நான் அப்பிடிச் சொல்லலே! அப்புறம் உங்கோபத். தைத் தாங்க முடியாது.”

"பின்னே என்ன அர்த்தத்துலே அப்படிச் சொன்னே கோபாலு?’’

-முத்துக்குமரனின் குரலில் சூடேறுவதைக் கண்டு கோபால் மேலே பேசுவதற்குப் பயப்பட்டான். முத்துக் குமரனோ சீறத் தொடங்கி விட்டான்.

"பொண்ணைப் பொண்ணா நடத்தணும். வியா பாரம் பண்ணப்பிடாது. யாரோ செய்யற வேலையை உன்னையைப்போல ஒரு கலைஞன் ஏன் செய்யணும்னு தான் எனக்கும் புரியலே. நீ இப்ப பழைய நாடகக் கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/202&oldid=561002" இலிருந்து மீள்விக்கப்பட்டது