பக்கம்:சமுதாய வீதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 0. - சமுதாய வீதி

காசங்களின் அடியில்தான் அந்தகாரம் வசிக்கிறது. கலை யுலகம் என்ற வீதி இரவும் பகலும் பிரகாசமாக மின்னு கிறது. புகழர்ல் மின்னுகிறது. வசதிகளால் மின்னுகிறது. ஆனால் இதயங்களால் மின்னவில்லை. எண்ணங்களின் பரி சுத்தத்தால் மின்னவில்லை. அந்த வீதியின் பிரகாசத் தில் மிக வனப்புடைய பலருடைய சரீர அழகும், மன அழகும், மெளனமாகவும் இரகசியமாகவும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.

'ஊருக்குப் போனதும் போடி கழுதைன்னு என் னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளிடப் போறா ffrruh.” -

யார்? கோபால் உங்கிட்டச் சொன்னானா? "ஆமாம், ஈப்போவுக்குப் பிளேன்ல வரமாட்டேன்னு சொன்னப்ப எங்கிட்டச் சத்தம் போட்டாரு!’’

"'கலை ஒரு பெண்ணின் வயிற்றுக்கும் வசதிகளுக்கும் பாதுகாப்பளிக்கிறதே ஒழிய உடம்பிற்கும் அதன் கற்புக் கும் பாதுகாப்பளிப்பதில்லை.'

& or 3 or *** - - - is a --

அவளால் இதற்குப் பதில் எதுவும் சொல்ல முடி வில்லை. அவன் முகத்தை நேரே பார்ப்பதற்குத் துணி வின்றிக் கீழே தரையை நோக்கிக் குனிந்தது அவள் முகம்.

உதயரேகா சகிதம் அப்துல்லாவும் கோபாலும் கேமரான் ஹைலண்ட்ஸுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் கேமரான் ஹைலண்ட்ஸிலிருந்து திரும்பியதும் குழுவினர் அனைவரும் ஈப்போவிலிருந்து திரும்பியதும் புறப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

அன்று பகலில் மாதவியும் முத்துக்குமரனும், குழு வைச் சேர்ந்த துணை நடிகன் ஒருவனும், ஒரு டாக்ஸி வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, ஈப்போவைச் சுற்றி யிருந்த சுங்கை, சுங்கை சிப்புட், கம்பார் முதலிய உள்ர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/242&oldid=561043" இலிருந்து மீள்விக்கப்பட்டது