பக்கம்:சமுதாய வீதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்த சாரதி 25.3

நடிக்க இருப்பதற்கு மகிழ்ந்தான். சமயோசிதமாக அவ னுக்கு தோன்றிய யோசனையையும் நிலைமையை அயரா மல் சமாளிக்கும் அவனுடைய தீரமும் மாதவிக்கு மிகவும் பிடித்திருந்தன. அவனுடைய அந்தத் தீரம்தான் அவளை அவன்பால் ஏக்கம் கொண்டு உருகச் செய்தது. காதல் கொண்டு நெகிழ வைத்தது.

19

அன்றைய நாடகத்துக்கு முன்பு அவசர அவசரமாக வசனங்களையும் காட்சிகளின் வரிசை அமைப்பையும் ஒரு முறை புரட்டிப் பார்த்தான் முத்துக்குமரன். அவனே வசனங்களை எழுதி டைரெக்ட் செய்திருந்ததனாலும் சில முறை நாடகங்களைச் சபையில் அமர்ந்து பார்த்திருந்த தனாலும் எல்லாம் நன்றாக நினைவிருந்தது. தவிர அவனே ஒரு கவியாக இருந்ததனால் மனோ தர்மத்துக்கு ஏற்ப அப்போதே வசனத்தை இடத்துக்குப் பொருத்த மாக மேடையிலேயே இயற்றிச் சொல்லிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. உடன் நடிப்பவள் மாதவி யாகையினால் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கும் குறைவில்லை.

- அப்துல்லாவுக்கு மட்டும் பயம் இருந்தது. கோபால் நடிக்கவில்லை என்று தெரிந்து ஜனங்கள் எதுவும் கலாட்டா செய்து மேடை மேல் நாற்காலியைத் தூக்கி வீசுகிற நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்று பயந்தார் அவர். ஆனால் கூடவே ஒரு நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. கோபாலை விட முத்துக்குமரன் அதிக அழகன் என்பதும் பார்க்கிறவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவ 'ரும் வசீகரமான கம்பீர புருஷன் என்பதும் அவருக்குத் தைரியம் அளித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/255&oldid=561057" இலிருந்து மீள்விக்கப்பட்டது