பக்கம்:சமுதாய வீதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சமுதாய வீதி

சிரிப்பாங்க-என்று நண்பனைக் கடிந்து கொண்டான் முத்துக்குமரன். -

"வாத்தியாரே! தப்புத்தான். புத்தியில்லாமச் செய் துட்டேன், இப்ப நினைச்சு என்ன பிரயோசனம்: குடிக் கிறதுக்கு முன்னாடி நினைச்சிருக்கணும். அப்ப எனக்குச் சுய புத்தியில்லே...'

"எப்பத்தான் உனக்குச் சுயபுத்தி இருந்திச்சி? அது போகட்டும், இப்ப எப்பிடி இருக்கு? நேத்து நல்லாத் தூங்கினியா?”

நல்லாத் தூங்கினேன். காலையில் விடிந்ததும் நாடகம் கான்ஸ்லாயிடிச்சோன்னு கவலையோட இருந் தேன். நல்ல வேளையா நீ காப்பாத்திட்டே, பத்திரிகை யைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்துல்லாவும் வந்து சொன்னாரு, என்னைவிடப் பிரமாத்மா நடிச்சேன் னாரு...'

"சே! சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லே. தப்பு இல் லாமச் செய்தேன். அவ்வளவுதான்...'

'நீ சும்மா அடக்கமா மறைக்கப் பார்க்கிறே வாத்தி யாரே ஏகப்பட்ட கைதட்டல்னு அப்துல்லா ஒரேயடி யாப் புகழ்ந்து பிரமாதமாகக் கொண்டாடறாரு . பேப்பர்க்காரனும் உன்னைப் பாராட்டி எழுதியிருக் கான்."

"ஆயிரம் இருக்கலாம்டா கோபாலு! நீ அதுக்குன்னே பிறந்தவன்; உன்னை மாதிரி ஆகுமா!'

-இவ்வளவில் ரொம்பப் பேச வேண்டாம்; பேஷன் டுக்கு ரெஸ்ட் வேணும்’-என்று நர்ஸ் வந்து கடிந்து கொள்ளவே அவர்கள் புறப்பட்டனர். முத்துக்குமரனும் மாதவியும் ஸ்டிரெய்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றபோது ரெட்டி யாரிடமிருந்து'ஃபோன் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/258&oldid=561060" இலிருந்து மீள்விக்கப்பட்டது