பக்கம்:சமுதாய வீதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25?

நேத்து நானும் நாடகத்துக்கு வந்திருந்தேன். நேத்து உன்னை வேஷத்திலே பார்த்தப்பவே எனக்கு சந் தேகமா இருந்தது. ஆனா நம்ப முடியலே. இன்னிக்குக் காலையிலே பேப்பரைப் பார்த்தப்பதான் என் சந்தேகம் சரிதான்னு தெரிஞ்சுது. பிரமாதமா இருந்திச்சுப்பா உன் நடிப்பு...சும்மா சொல்லப்பிடாது, ஜமாய்ச்சுப் பிட்டே. ஆமா இப்ப கோபாலுக்கு எப்படி இருக்குது; நான் போய்ப் பார்க்கலாமா?’’

இன்னிக்கி வேணாம் ரொம்ப ரெஸ்ட் தேவைங்கி றாங்க. நாளைக்கிப் போய்ப் பாருங்க. மவுண்ட்பாட் டன் ரோடிலே இருக்காரு' என்று ரெட்டியாருக்குப் பதில் கூறினான் அவன். அதன்பின் குழு கோலாலும்பூ ரில் முகாமிட்டிருந்த ஏழு நாளும் கோபாலின் பாத்திரங் களை எல்லாம் முத்துக்குமரனே நடித்தான். பிரமாதம் என்று பேரும் வாங்கினான். பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. பத்திரிகைகள் பத்தி பத்தியாகப் புகழ்ந்து எழுதின. சிலர் முத்துக்குமரன், மாதவி ஜோடிப் பொருத்தத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

வசனம் மறந்து போறப்ப நீங்களே மேடையிலே வசனம் பேசிக்கிறீங்க. அது சில சமயம் ஏற்கனவே எழுதி வச்சிருந்த வசனத்தைவிட நல்லா அமைஞ்சிடுது’’ என்றாள் மாதவி.

இதுலே அதிசயப்படறதுக்கு என்ன இருக்கு மாதவி: எல்லோரும் அதிசயப்படறதைப் போல நீயும் அதிசயப் படறதிலே அர்த்தமில்லே. பிறந்ததிலிருந்து இதிலேயே உழன்றுக்கிட்டிருக்கேன். பாய்ஸ் கம்பெனிக் காலத்தி லிருந்து இன்றுவரை பார்த்தாச்சு. என்னாலே இதுகூட முடியலேன்னாத்தான் ஆச்சரியப்படனும் நீ.'

"உங்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு உங்களோட ஒவ்வொரு சாதனையுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/259&oldid=561061" இலிருந்து மீள்விக்கப்பட்டது