பக்கம்:சமுதாய வீதி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.8 சமுதாய வீதி

பெருசுதான். ஒவ்வொரு திறமையுமே ஆச்சரியந்தான். நான் அதை இனிமே மாத்திக்க முடியாது'-என்றாள் மாதவி,

சும்மாயிரு! நீ ஒரு பைத்தியம்.'

'பைத்தியம்னே வச்சுக்கங்களேன். ஆனா எல்லாப் பித்தும் உங்கமேலேதான்! நீங்க சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்ல இறங்கினப்ப, தனியா யாருமே கவனிக்காமே அநாதை போல நின்னப்ப என் வயிறெரிஞ்சுது. அதுக்குப் பலன் இப்பத்தான் கிட்டியிருக்கு. அப்துல்லாவும் கோபாலும் பினாங்கிலே அநாவசியமா உங்களைக் கொதிக்கக் கொதிக்கப் படுத்தினாங்க, இன்னிக்கு நீங்க தான் அவங்க மானத்தைக் காப்பாத்த வேண்டியிருக்கு." .

'சரி சரி! போதும் இதோட விடு, என் தலையை ரொம்பக் கணக்கப் பண்ணாதே. நீ புகழ்ந்தால் தலை ரொம்பக் கனமாகிவிடுகிறது மாதவி...'

அது சரி. நேத்து அப்துல்லா ஏதோ தனியா உங்க ளைப் பார்க்கணும்னாரே?...'

'அதுவா? எங்கிட்ட வந்து, சமயத்துல கைகொடுத் துக் காப்பாத்தினிங்க! பழசு ஒண்ணையும் மனக்லே வச் சுக்காதீங்கன்’னு சொல்லி ஒரு வைர மோதிரத்தை நீட் டினார்.'

'அயா நான் உங்களுக்காக எதையும் செய்யவை, க. நண்பனுடைய மானத்தைக் காக்கவே என் Յ5ւ- 6ուD6ծ) լլյ நான் செய்தேன். எது செய்யணும்னாலும் கோபாலுக்கு செய்யுங்க. எனக்கு உங்களோட நேரே பேச்சில்லைன்னு மறுத்திட்டேன்.

'நல்லா வேணும்? உங்களை எத்தினி பாடு படுத்தி னாரு. இங்கிலீஷ் தெரியாதுன்னு உங்களைக் கிண்டல் வேறே பண்ணினாரு, ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/260&oldid=561062" இலிருந்து மீள்விக்கப்பட்டது