பக்கம்:சமுதாய வீதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 271

வையையும் கட்டிக்கொண்டு அவள் எதிரே வந்தபோது அழகிய உஷத்காலமே சிரித்துக்கொண்டு வருவது போலி ருந்தது முத்துக்குமரனுக்கு. அப்போது கோபால் நைட் கவுனோடு அவுட்ஹவுஸ்-க்கு வந்தான். மாதவியின் பக்கம் சென்ற அவன் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது. அவளோடு அவன் பேசவே இல்லை. அவன் தன்மேல் ரொம்பக் கோபம் அடிைந்திருக்கிறான் என்பது அவளுக் கும் ஒருவாறு புரிந்தது திடீரென்று கோபால் முத்துக் குமரனிடம் ரொம்பவும் பிஸினஸ்லைக்காகப் பேசலா னான்:

'நீ எனக்குப் பதிலா கோலாலும்பூரில் எட்டு நாடக மும், மலாக்காவிலே மூணு நாடகமும், ஆக மொத்தம் பதினோரு நாள் வேஷங் கட்டியிருக்கே...'

"ஆமா! அதுக்கென்ன இப்ப?” 'இல்லே பண விஷயத்திலே அண்ணன் த்ம்பிகளுக் குள்ளே கூடச் சண்டை வரும்பாங்க...'

'திடீர்னு உனக்கு இப்ப என்ன வந்திரிச்சிடா, கோபாலு...'

பதினொரு நாடகத்துக்காகவும் சேர்த்துப் பதினை யாயிரம் ரூபாயும், நாடக்த்தை எழுதினதுக்காக ஐயா யிரம் ரூபாயும் சேர்த்து இருபதாயிரத்துக்கு ஒரு செக்' ராத்திரி எழுதி வச்சேன். இந்தா.

முத்துக்குமரன் முதலில் சிறிது தயங்கினான். அப்பு றம் மனதுக்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் மறுக்காம்ல் அந்தச் செக் கை உடனே கோபாலிட மிருந்து வாங்கிக் கொண்டான். அடுத்த நிமிஷம் கோபால் முற்றிலும் எதிர்பாராத இன்னொரு கேள்வி யும் முத்துக்குமரனிடமிருந்து எழுந்தது:

"மாதவி கணக்கு என்னென்னு பார்த்து அதையும் இப்பவே தீர்த்துவிட முடியுமா?’’

"அதைக் கேக்கிறதுக்கு நீ யாரு?" திடீரென்று முத்துக்குமரனே எதிர்பாராத விதமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/273&oldid=561075" இலிருந்து மீள்விக்கப்பட்டது