பக்கம்:சமுதாய வீதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.2 சமுதாய வீதி

கோபாவின் குரலில் சூடேறித் துடித்தது.

'நான் யாரா? நான்தான் இனிமே அவளுக்கு எல்லாம். அடுத்த வெள்ளிக்கிழமை குருவாயூர்லே எனக்கும் அவளுக் கும் கலியாணம், இனிமே அவ உங்கூட நடிக்கமாட்டா.”

'அதை அவள்னா சொல்லனும் எங்கிட்ட, நீ யாரு சொல்றதுக்கு?’’

'அவ உங்கிட்டப் பேச விரும்பலை. நான்தான் சொல்லுவேன்.' -

" உன்னை ரொம்ப நெருங்கின சிநேகிதன்னு நெனைச்சு இந்த வீட்டிலே நுழைய விட்டேன்...'

'அதுக்கு நான் எந்தத் துரோகமும் செஞ்சுடலையே?’ 'சரி! சரி! அதைப்பத்தி இப்ப என்ன? ஒரே உறையிலே ரெண்டு கத்திகள் இருக்க முடியாது. அஞ்சு நிமிஷம் இரு மாதவி கணக்கையும் தீத்துடறேன்.' என்று பதில் கூறி விட்டுத் தன்னுடைய பெர்ஸனல் ஸ்ெகரெட்டரிக்கு அங்கிருந்தே ஃபோன் செய்தான் கோபால். பத்தே நிமிஷத்தில் அவனுடைய பெர்னைல் ஸெகரெட்டரி இன்னொரு செக் லீஃப்" கொண்டு வந்தார். அவள் பெயருக்கு ஒர் இருபதாயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தான்.

'பணம் கொடுத்திட்டேடா கோபால்! ஆனா மனு ஷன் சில சமயங்களிலே செய்த உதவி, பணத்தால் மதிப் பிட முடியாதுங்கறதை மட்டும் நினைவு வச்சிக்க. பணத்தை உன் முகத்திலே வீசி எறியாமே நான் வாங்கிக் கிறதுக்கு ஒரே காரணம்-இன்னிக்கி இந்த உலகத்திலே பணத்தை விட உயர்ந்த விஷயங்களான மானம், மரியா தையைக் காப்பாத்திக்கிறதுக்கும் இந்தப் பாழாய்ப்போன பணம்தான் வேண்டியதாயிருக்கு. அந்த ஒரே காரணத் துக்காகத்தான் பணத்தைக் கணக்காக நானும் கேட்டு வாங்கிக்கிறேன்.' -

கோபால் இதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே எழுந்து போய்விட்டான். முத்துக்குமரன் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/274&oldid=561076" இலிருந்து மீள்விக்கப்பட்டது