பக்கம்:சமுதாய வீதி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27.3

பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்தான். மாதவி அவ னுக்கு உதவி செய்தாள். பத்துப் பதினைந்து நிமிஷத்தில் அந்த அவுட்ஹவுஸைக் காலி செய்து சாமான்களை வராண்டாவில் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் அவர்கள். மாதவி அவனிடம் கூறினாள்:

"சண்டை வந்ததே என்னாலேதான். நான் ராத்திரி வீட்டுக்கே போயிருக்கணும்.'

'மறுபடியும் உன் பேச்சிலே பயம் வர்ராப்பிலே தெரி யிறதே மாதவி இப்பிடி ஒரு சண்டை வந்ததுக்காக நான் சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா... மறுபடியும் அநாவசியமாகக் கவலைப்படறியே! இனிமே இவங்கிட்டே நாம இருக்க முடியும்னா நீ நினைக்கிறே? சும்மா நடிச்சுக்கிட்டே இருந்தா இப்படித்தான் புத்தி வக் கிரமாகப் போகும். கொஞ்சமாவது வாழனும். ஒருத்தன் வாழாம்ே நடிச்சா அது நல்ல கலையாகவும் இருக்க முடி யாது. கோபால் ஒழுங்கா இருக்கணும்னா கலியாணங் கட்டிக்கிட்டு ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை முதல்லே அவன் பழகிக்கினும். இல்லாட்டி அவன் இதைவிட இன் னும் மோசமாகச் சீரழிஞ்சுதான் போவான். இந்த பங் களாவைத்தான் பாரேன், பேய் வீடுமாதிரி. வாசல்லே ரெண்டு இழைக் கோலம் போட ஒரு சுமங்கலி இதில்ே இல்லே. வேலையாட்களும், காரும், தோட்டமும், பணமும் இருந்து பயனென்ன? ஒரு குழந்தையின் மழலைகூட இந் தப் பங்களாவிலே இதுவரை கேட்கலே. கொஞ்சமாவது லட்சுமிக்களை இங்கே இருக்கா பாரேன்?' .

அவன் கூறியவை அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல் மாதவி மெளனமாக இருந்தாள். அவுட்ஹவுஸ் வாசலில் நின்று அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டி ருக்கும் போதே நாயர்ப் பையன் அங்கு வந்தான். அவனை ஒரு டாக்ஸி கொண்டுவருமாறு அனுப்பினாள் மாதவி. டாக்லி வந்தது. பையன் மாதவியிடம் தனியே ஏதோ பேசிக் கொண்டு நின்றான். அவன் கண்கள் கலங் கியிருந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/275&oldid=561077" இலிருந்து மீள்விக்கப்பட்டது