பக்கம்:சமுதாய வீதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名7每 சமுதாய வீதி

'உங்ககிட்ட ஒரு அஞ்சு ரூபா இருந்தாக் குடுங்க...” -என்று மாதவி முத்துக்குமரனைக் கேட்டு ஒர் ஐந்து ரூபாய் வாங்கி அந்தப் பையனிடம் கொடுத்தாள். பையன் இருவருக்கும் ஒரு கும்பிடு போட்டான். அவன் கண்கள் மீண்டும் கலங்கின.

"அடுத்த வாரம் பினாங்கிலேருந்து கப்பல் வந்ததும் உதயரேகா இங்கே இந்த அவுட்ஹவுஸ்லே வந்து தங்கப் போறாளாம். கோபால் தன்னிடம் சொன்னதாகப் பையன் எங்கிட்டச் சொன்னான்' என்றாள் மாதவி:

அது சரி! அப்துல்லா அவளைப் பினாங்கிலேருந்து இங்கே வரவிட்டால்தானே? இதைக் கேட்டு அவளுக்கு சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.

விடு அசிங்கத்தை வேறே நல்ல விஷயம் ஏதாவது பேசுவோம்' என்றான் முத்துக்குமரன். இருவரும் டர்க்வியில் ஏறி அமர்ந்தனர். பையன் முத்துக்குமரனு டைய பெட்டி படுக்கையையும், மாதவியின் சூட்கேஸ் களையும் டாக்ஸியில் எடுத்து வைத்தான். முத்துக்கும ரன் அவளைக் கேட்டான்:

எங்கே போகலாம்? உன்னை வீட்ல விட்டுட்டு நான் பழையபடி எக்மோர் லாட்ஜுக்கே போயிடட் (pluorr?”

"ஹேய்... ஆளைப் பாரு! லாட்ஜுக்காவது போற தாவது? நான் விட்டாலும் உங்க மாமியார் விடமாட் டாங்க வம்பு பண்ணாம வீட்டுக்கே வந்து சேருங்க..." இப்படி அவள் பேசியது அவனுக்கு மிகவும் பிடித்தது. டாக்ளி விரைந்தது. டாக்ஸிக்காரனுக்கு லாயிட்ஸ் ரோட்டில் இடம் அடையாளம் சொல்லிவிட்டு முத்துக் குமரனிடம் பேசத் திரும்பினாள் மாதவி. அவன் அவளைக் கேட்டான்: . .

'உன்னை இன்னொரு கேள்வி கேட்கணுமே?” 'என்னது, கேளுங்களேன்'

வீட்டிலே எத்தனை கட்டில் இருக்கு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/276&oldid=561078" இலிருந்து மீள்விக்கப்பட்டது