பக்கம்:சமுதாய வீதி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 275

'ஏன்? ரெண்டு இருக்கு?’’

"இருக்கப்பிடாதே...?' . .

"சீ குறும்பெல்லாம் வேணாம்' என்று உதட்டில் விரலை வைத்துக்காட்டி அவனை அதட்டுபவள் போல் அவள் பாவனை காட்டியது மிகமிக அழகாயிருந்தது. ஒவ் வொரு குறும்பிலும் அவளை ரசித்தான் அவன். நிறைய உள்ளர்த்தங்களும், வியங்கியமும், வசீகரமும், அணிகளும் நிறைந்த ஒரு கவிதையைப் போலிருந்தாள் அவள். அவள் இரண்டு உதட்டின் மேலும் விரலை வைத்துத் தன்னை அதட்டுவதுபோல் பாவனை காட்டிய சமயத்தில் அவள் முகத்தில் தெரிந்த குறும்பும் அழகும் கலந்த வசீகரத்தை அப்படியே ஒரு கவிதையாக எழுதவேண்டும் போலிருந்தது அவனுக்கு. மாதவியின் தாய் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றாள். பணம் கொடுத்து அனுப்புமுன் டாக்ஸிக்

காரன்,

'அவங்க சினிமாப் படத்திலே நடிச்சிருக்காங்கள்ளே சார்?' என்று முத்துக்குமரனைக் கேட்டபோது, "ஆமா, இனிமே நடிக்கமாட்டாங்க' என்று நிர்த்தாட்சண்யமான குரலில் மறுமொழி கூறினான் முத்துக்குமரன். மாதவி முன்பே இறங்கி உள்ளே போயிருந்தாள். உள்ளே சென்ற தும் முதல் வேலையாக டாக்ஸிக்காரன் கேட்டதையும், அதற்குத் தான் சொன்ன பதிலையும் அவளிடம் கூறினான் முத்துக்குமரன். மாதவி சிரித்தாள். -

'உங்களாலே நட்சத்திர உலகத்துக்கு எத்தினி பெரிய நஷ்டம்னு உங்க மேலே கோபத்தோட போயிருப்பான்

அந்த டாக்ஸி டிரைவர்...'

'அப்பிடியாகிவிடாது! நஷ்டத்தை ஈடுசெய்ய எத்த னையோ உதயரேகாக்கள் வருவார்கள்.”

-அவள் மீண்டும் சிரித்தாள்.

ကိို တိံ တိံ

அடுத்த , வெள்ளிக்கிழமை குருவாயூர் கோவிலில் மாத விக்கும், முத்துக்குமரனுக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு எங்கிருந்தும் எந்த ரசிகர்களும் வாழ்த்தனுப்பவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/277&oldid=561079" இலிருந்து மீள்விக்கப்பட்டது