பக்கம்:சமுதாய வீதி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சமுதாய வீதி

எந்தப் படவுலகப் பிரமுகர்களும் வரவில்லை. திருமணம் முடித்த்தும் அவர்கள் விணங்கியெழ மாதவியின் தாய் மட் டுமே அவர்களோடு உடனிருந்தாள். அன்றிரவு அவர்கள் மாவேலிக்கரைக்கு ஒரு டாக்ளியில் அங்கிருந்து சென்றார் கள். மாவேலிக்கர்ை மாதவியின் சொந்த ஊர் ஆயினும் அங்கே அவளுக்கு வீடு வர்சல் இல்லை. சொந்தக்காரர்கள் வீட்டில் அவர்கள் அன்றிரவு திங்கினர். இரவுச் சாப்பாட் டிற்குப் பின் தனிமையில் அவள் அவனிடம் வந்தாள்.

பார்த்தீங்களா? இங்கே எல்லாருமாகச் சேர்ந்து சதி பண்ணி இந்த அறையிலே ஒரே கட்டில்தான் போட்டிருக் காங்க...”*

அவன் சிரித்தான். அவள் அவனருகே வந்தாள். நறுமணம் நிறைந்த மலையாள மல்லிகை அவள் கூந்த லைச் சூழ்ந்திருந்தது. அவன் அவளைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்து அந்தப் பூவின் நறுமணத்தை நாசி நிறைய நுகர்ந்தான். -

மாதவி! சமூகத்தின் நீண்ட வீதிகளில் எங்கும் பயப்படாமல் நடக்க வேண்டுமானால், பெண் இப்படி ஒரு பாதுகாப்பான கட்டிலிலிருந்துதான் கீழே இறங்கி நடக்க முடியும் என்பது பல்லாயிரம் தலைமுறைகளுக்கு முன்பே முடிவாகிவிட்ட விஷயம். சமுதாய வீதியில் நிரந் தரமாக இராவணர்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்." - -

'அப்துல்லாவைச் சொல் lங்களா?' 'அப்துல்லா, கோபால், எல்லோரும்தான்! ஒருத்தருக் கொருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிக்கிறாங்களே!'

அவள் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந் தாள். -

தன்னுடைய சொந்தக்கட்டிலில் உறங்குவது போன்ற். சுகத்தை அந்த நெஞ்சு அவளுக்களித்தது. பெண் உறங்கு வதற்கு இப்படி ஒரு கட்டிலும் இப்படி ஒரு துணையும் வேண்டுமென்பது ஆண்மக்களில் முதல் இராவணன் தோன்றியபோதே உலகில் முடிவாகிவிட்டது. இராவணன் கள் இருக்கிறவரை அவள் சமூகத்தின் புழுதி படிந்த வீதி களில் துணையின்றித் தனியாக நடக்கவே முடியாதோ என்னவோ?’’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/278&oldid=561080" இலிருந்து மீள்விக்கப்பட்டது