பக்கம்:சமுதாய வீதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 소 9.

நாடகத்தைப் பத்தி இன்ஃபார்மலா உன்னிடம் பேசு வாங்க...கேள்விகள் கேட்பாங்க... ' கேள்விக்கெல்லாம் நீதான் கோபப்படாமல் பதில் சொல்லணும். என்ன சரிதானா?”

'நாடகமே இன்னும் தயாராகலே: அதுக்குள்ளே. இதெல்லாம் வேற எதுக்கு?' -

'இந்த ஊர்ல இதெல்லாம் ஒரு முறை. முன்கூட்டியே ஒரு பப்ளிவிடிதான். வேறென்ன? திட்டினாலும் டியன், காபி, பீடா எல்லாம் குடுத்திட்டு அப்புறம் திட்டி னாத்தான் இங்கே கேட்பாங்க...'

'கொஞ்சம் கொஞ்சமா என்னை மெட்ராசுக்குத் தயாராக்கப் பார்க்கறே! இல்லியா?" .

"தயாராக வேண்டியதுதானே?" 'இதெல்லாமே ஒரு நாடகமாவில்லே இருக்கு?" "அப்படித்தானே இருக்கனும்!" -

"யாராரு வருவாங்க?"

"சினிமா நிருபர்கள், பிரபல கதை வசன கர்த் தாக்கள், டைரக்டர்கள். நம்ம குழுவுக்குத் தேர்ந்தெடுத் திருக்கிற ஆளுங்க...மற்ற நடிக நடிகையர்களிலே சில பேரு...எல்லாரும்...வருவாங்க...' -

"என்னை என்னவோ கேட்பாங்கன்னியே; என்ன என்ன கேட்பாங்க...?' .

'தப்பா ஒண்னும் கேட்க மாட்டாங்க? நீங்க எழுதப் போகிற நாடகம் எதைப் பற்றி? எப்ப்டி எப்ப தயாராகும்?’னு கேட்பாங்க தமிழகத்தின் மகோன்னத Et)፫6ሾff பொற்காலத்தைச் சித்தரிக்கும் மகோன்னதமான வரலாற்று நாடகமாக இது அமையும். இதுவரை யாரும் இப்படி ஒரு நாடகத்தைத் தமிழகத்துல்ே மட்டுமில்லே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/51&oldid=560844" இலிருந்து மீள்விக்கப்பட்டது