பக்கம்:சமுதாய வீதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 59

வாசனையும் குளிரும் அவன் மனத்தில் அநுராக கீதம் இசைத்தன. -

5

நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படி யேறி அறைக்குள் வந்ததும்...தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக் குமரனுடைய அணைப்பில் சிக்கியது. -

என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவ தற்குத்தான் வந்தேனாக்கும்...'

"இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில் லையா?"

-அவள் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள். - -

'உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்...'

"ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத் திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும்--

முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளு டைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன.

"உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/61&oldid=560854" இலிருந்து மீள்விக்கப்பட்டது