பக்கம்:சமுதாய வீதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 63.

படுக்கையில் களைப்போடு வி ழு ந் த போது அவுட் ஹவுஸுக்கு அருகில் தோட்டத்திலிருந்து பவழ மல்லி கைப் பூக்களின் ஈர வாசனை குளிர்ந்த காற்றுடன் கலந்து வந்தது. அந்த வாசனையை உள்வாங்கி மனத்தி லிருந்த மாதவியைப் பற்றிய நினைவுகளுக்குச் சூட்டிக் கொண்டு உறங்கினான் அவன். " .

மறுநாள் காலையில் விடிந்ததே அவனுக்குத் தெரி யாது. அவன் எழுந்திருக்கும் போது ஏறக்குறைய மணி ஒன்பதாகிவிட்டது. அப்போது அவுட்ஹவுஸின் வராந்: தாவில்-மாதவியின் குரலும், கோபாலின் குரலும் கலந்து கேட்டது. மாதவி வந்திருக்க வேண்டுமென்ற அநுமானத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் முத்துக் குமரன். பதினைந்து இரு பது நிமிஷங்களுக்குப்பின் அவன் மறுபடி வெளியே வந்தபோது-நாயர்ப் பையன் காபி சிற்றுண்டியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தான். -

சிற்றுண்டியை முடித்துக் கைகழுவிக் கொண்டு வந்து அவன் காபியை பிளாஸ்கிலிருந்து டம்ளரில் ஊற்றிப் பருகிக் கொண்டிருந்த போது, மாதவி உள்ளே வந்தாள். .

"எனக்குக் கிடையாதா?’’

. அவளுடைய குரல் அவனைக் கெஞ்சியது; கொஞ் சியது. முத்துக்குமரன் பிளாஸ்கைக் கவிழ்த்துப் பார்த் தான். அதில் காபி இல்லை. அவன் கையிலிருந்த டம்ளரில் முக்கால் வாசி பருகியது போக மீதமிருந்தது.

"இந்தா, குடி... -என்று குறும்புத்தனமாகச் சிரித் துக் கொண்டே அதையே அவளிடம் நீட்டினான் அவன். - -

"நான் கேட்டதும் இதைத்தான்-என்று புன்முறுவ லோடு அதை அவனிடமிருந்து வாங்கிப் பருகினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/65&oldid=560858" இலிருந்து மீள்விக்கப்பட்டது