பக்கம்:சமுதாய வீதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சமுதாய வீதி

தாகக் கூறினாள். அவன்தான் பிடிவாதமாக அவள் வர வேண்டாமென்று மறுத்தான்:

'வந்தால் நீ ம்றுபடியும் கோபாலுடைய காரிலேயே திரும்ப வேண்டியிருக்கும் டிரைவருக்கு அநாவசியமா ரெண்டு அலைச்சல் ஆகும்.'

"'உங்களோடு வந்துவிட்டுத் திரும்பினோம்னு என் மனசுக்கு ஒரு திருப்தியிருக்கும்னு பார்த்தேன். அவ்வளவு தான்...'

'ராத்திரியிலே வீணா அலைய வேண்டாம். காலை தான் பார்க்கப் போகிறோமே?”

'சரி உங்க இஷ்டப்படியே நான் அங்கே வரலே.'

முத்துத்குமரன் மாதவியின் தாயிடம் சொல்வி விடைபெற்றுக் கொண்டான். அந்த மூதாட்டி அன்புமய மாயிருந்தாள். மாதவி வாயில் வரை வந்து அவனை வழி யனுப்பினாள். மணி இரவு ஒன்பதரைக்குமேல் ஆகியிருந் தது. கார் புறப்படுவதற்கு முன் கதவருகே குனிந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெதுவான குரலில், 'நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் அங்கே ஒண் ணும் ரொம்பச் சொல்லவேண்டாம்' என்றாள் மாதவி. புரிந்தும் புரியாததுபோல், அங்கேன்னா எங்கே?' என்று சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான் அவன், அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் கார் நகர்ந்துவிட்டது. அவள் அப்படிக் கூறியதை அவன் அவ்வளவாக இரசிக்க வில்லை. தானும் அவளும் கடற்கரைக்குச் சென்றது, பேசி யது, திரிந்தது எதுவுமே கோபாலுக்குத் தெரிய வேண் டாம் என்று அவள் பயந்தாற்போலக் கூறியது அவனுக் குப் பிடிக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு முன்னெச்சரிக் கையோடு அவள் அதைப் பற்றிக் கூறியதன் உட்கருத்து என்னவாக இருக்குமென்று அவன் சிந்திக்கத் தொடங்கி னான். அவள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/82&oldid=560877" இலிருந்து மீள்விக்கப்பட்டது