பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலந்தி வலை

85


“இதுக்கே உங்க ரெண்டு பேரையும் ஆறு வருஷம் உள்ள போடலாம்.”

‘அய்யா தர்மபிரபு... நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். எப்படியோ உண்மையை உளறிட்டேன். நீங்கதான் என்னை, என் முதலாளிகிட்ட இருந்தும் காப்பாத்தணும். உங்க காலுல...”

வேன்காரன், ஏங்கி ஏங்கி அழுதபடியே, சப்-இன்ஸ்பெக்டரின் பூட்ஸ் காலில், மனித வெடிகுண்டுபோல் குனிந்தபோது, சாமிநாதன் அவனை லத்திக் கம்பால் நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொன்னான்.

“உன்னை பார்க்கிறதுக்கு பாவமாய் இருக்குது. இந்தா வி சிட்டிங் கார்டு... இந்த விலாசத்திற்கு நாளைக்கு, ஏ.சி. சுமோவோட காலை ஆறுமணிக்கு போய் நிற்கணும். அந்த வீட்ல இருக்கிற ஒருவரை திருப்பதி வரைக்கும் பத்திரமாய் கொண்டு போய், பத்திரமாய் கொண்டு வரணும். சாப்பாட்டில் இருந்து சகல வசதியையும் தடயுடலா கவனிச்சுக்கணும். புரியுதா...?”

“எதுக்கும் எங்க முதலாளிகிட்ட ஒரு வார்த்தை...”

“அடி செருப்பால...”

லாக்கப் கைதிகளை பார்த்துவிட்டு திரும்பிய அதே காவலர், சப்-இன்ஸ்பெக்டரின் வாய், செருப்பானபோது, அவரது கைகளும், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைகளோடு சேர்ந்து வேன்காரன் மீது விழும் செருப்பானது. முடியுமா... முடியாதாடா...’ என்று ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிற்கும் ஒவ்வொரு விதமாய் அடித்தார். உடனே வேன்காரன், முடியும் ஸார்... முடியும் ஸார்...’ என்று வலியோடு முனங்கினான். அடித்த களைப்பிற்காக, சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட சாமிநாதன், அந்த அடிதடிக் காவலரை அமைதிப் படுத்திவிட்டு ஆணையிட்டான்.

“இந்தப் பயகிட்ட ஒரு ஸ்டேட்மெண்டை வாங்கிக்கோ... இந்தா பாருப்பா! ஒன் பேரு என்ன...? பழனியா...? அதுதான் லைசென்சு இல்லாம ஒட்டாண்டியாய் வந்திருக்கியோ...? உன் வேன் இங்கேயே