பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலந்தி வலை

87


எங்கிருந்தோ வந்த ஒரு குடிகாரன், புரட்சிப் புயல் என்கிறதுக்குப் பதிலாய், புரட்சிப் பயல்ன்னு உளறிக் கொட்டி பெரிய ரகளையே நடந்துட்டு... உன் ஆட்களையும் எனக்கு உதவியாய் போடுப்பா...”

“மனுஷன்னா ரோஷம் இருக்கணும் ஸார். ஒங்க வேலை ஒங்களுக்கு... என் வேலை எனக்கு...”

சாதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த தவறிய குற்றச்சாட்டின் பேரில், அசோகச் சக்கர அதிகாரி, ஒருவேளை இந்த எல் அண்ட் ஒ’ பெருமாளை இடைக்காலப் பதவி நீக்கம் செய்தாலும் செய்யலாம் என்று நினைத்தபடியே, சாமிநாதன் தலைபோகிற வேலை இருப்பதுபோல், ஜீப்பில் டிரைவர் இருக்கையில் துள்ளிக் குதித்தான். அதற்குள், புளிய மரத்து அடிவாரக்காரர்கள், தலைவிரி கோலமாய் ஓடிவந்து, ஜீப்பை சூழ்ந்து கொண்டார்கள். மனுக்களைக் கொடுக்கிற சாக்கில், அவன் பேண்ட் பைகளையும், சட்டைப் பைகளையும் உப்ப வைத்தார்கள். ஆசாமி, ஏதோ பூச்சி கடித்து வீங்கிப் போனது போலவே காட்சியளித்தான்.

அசோகச் சக்கர அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்ததுமே, வராண்டாவைத் தாங்கும் துண்களில் சாய்ந்தபடியே தூங்கிய இரண்டு காவலர்கள், துப்பாக்கிகளைக் கைமாற்றி, “டக்கென்று சத்தத்தை எழுப்பி, அவன் வருகையை அங்கீகரித்தார்கள். அவர்களைப் பார்த்து உப்புச் சப்பில்லாமல் தலையாட்டிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து ஊஞ்சல் பலகையில் ஆடிக்கொண்டிருந்த அம்மாவுக்கு, சாமிநாதன் ஒரு சல்யூட் அடித்தான். பெரிய அதிகாரியின் காக்கி யூனிபாரம், சுவரில், சோளக்காட்டுப் பொம்மையாய் தொங்குவதைப் பார்த்துவிட்டு, அவன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அந்த முகம் பூஜை அறையை நிமிட்டிக் காட்டியது.

சாமிநாதன், பூஜை அறைக்கு வெளியே ஒரு வெறுங்காலும் உள்ளே ஒரு வெறுங்காலுமாய் நின்றபோது, அசோக சக்கர அதிகாரி, தாம்பூலத்தட்டில் கற்பூரம் ஏற்றி, அங்கிருந்த தெய்வப் படங்களுக்கு ஆலவட்டம் சுற்றினார். உடனே சாமிநாதன், அந்தத் தட்டில் கத்தை கத்தைகளாக ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு, அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, நிமிர்ந்து ஒரு சல்யூட்