பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சமுத்திரக் கதைகள்


அவன், தங்களை கைது செய்யத்தான் வந்திருப்பான் என்ற சந்தேகத்தில், அங்கே ஆடை பாதி அங்கங்கள் பாதியாகக் கிடந்த ஏழேட்டு பேர் அலறியடித்து எழுந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ரமேகாவைப் பார்த்து ஒரு சல்யூட் அடித்தான். அடித்தபடியே கேட்டான்.

மேடம்! உங்களோட காதலிக்க வாங்க...”

“வாட்...?”

“சாரி மேடம். அந்த பேர்ல நடக்கிற ஒங்க கலைநிகழ்ச்சிக்கு, நான் செக்யூரிட்டி ஏற்பாடு பற்றி பேச வந்திருக்கிறேன். டாக்டர். தம்பி அனுப்பி வச்சார்.”

“நாங்க இப்போ, நீங்க சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கிறோம். நாளைக்குக் காலையில வாங்க...”

எல்லோரும் கொல்லென்று சிரித்தபோது, கூனிக்குறுகி நடந்த சாமிநாதனை, ரமேகா சொடக்கு போட்டு திரும்ப வைத்தாள்.

“லுக் மிஸ்டர் சப்-இன்ஸ்பெக்டர்! காலையில ஸாாப்பா 6I( மணிக்கு வந்துடனும். நான் துங்கி எழுந்திரிக்க லேட்டானாலும், காத்திருங்க பிளீஸ்...”

“எஸ் மேடம்...”

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தள்ளாடியது போலவே, அவனது ஜீப்பும் தள்ளாடியது. அந்த வாகனம் மட்டும் போலீஸ் அலங்காரத்தோடு இல்லாதிருந்தால், வண்டியும் நொறுங்கி இருக்கும்; அவனும் நொறுங்கியிருப்பான். எப்படியோ காவல் நிலையத்திற்குள் திரும்பினான். அவன் மனதுக்குள் செல்வி ரமேகாவைப் பற்றி ஆபாச சொற்களை உள்ளடக்கிய ஒரு அகராதியே உருவானது. ஆனாலும், அவள் கலை நிகழ்ச்சிக்கு, எந்தெந்தக் காவலர்களை அனுப்பலாம் என்ற சிந்தனை, அவன் மூளையை ஆக்கிரமித்திருந்தது.

இந்தச் சமயத்தில் ‘எல் அண்ட் ஒ’ பெருமாள், தனது சகாக்களோடு வெளியேறுவதற்குத் தயாராக இருந்தார். பல