பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலந்தி வலை

91


ஊர்வலங்களில் ஒரே முகம் அடிக்கடித் தென்பட்டால், அந்த முகத்தை குளோசப்பில் எடுக்கவேண்டும் என்று போலீஸ் புகைப்படக்காரருக்கு, அறிவுறுத்திக் கொண்டிருந்தார். லத்திக் கம்புகளை குனித்து வைத்திருக்க வேண்டும் என்றும் சகாக்களுக்கு தெளிவாக்கினார்.

சாமிநாதன் உட்காரும் முன்பே, ரைட்டர், அவன் பெயருக்கு வந்திருந்த ஒரு பெரிய கவரை நீட்டினார். அப்பாவித்தனமான கவர். அதைப் பிரித்துப் பார்த்தால், முன்னாலும் பின்னாலும் அரக்கு முத்திரைக்குமேல் அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்ட சின்ன சிவப்புக் கவர். அதன் மேல்பக்கம் அந்தரங்கம் என்ற வாசகம். நடுப்பக்கம் சாமிநாதனின் பெயரும் பதவியும் கொண்ட

gunsdorosioidosons.

சாமிநாதன், அந்தக் கவரை நிதானமாகத்தான் பிரித்துப் பார்த்தான். சிலசமயம் இப்படிப்பட்டக் கவர்களில் பாதுகாப்பு பற்றிய ரகசிய ஆணைகள் வருவதுண்டு. ஏகத்தாளமாக கவருக்குள் இருந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்தபடியே படித்தான்.

சாமிநாதனின் தலைக்குள் ஒரு பிரளயம்... கண்களுக்குள் ஒரு இருட்டு... அந்த எழுத்துக்களைத் தவிர எதையுமே பார்க்க முடியாத சூன்யம். அந்தக் காகிதம், இப்படி சேதி சொன்னது:

“ஜெட் 2. காவல் நிலைய குற்றயியல் துணை ஆய்வாளரான திரு. சாமிநாதன், வேலையில் விசுவாசமாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றவியல் புலன்விசாரணைகள் நிலுவையில் நிற்கின்றன. இது, திரு. சாமிநாதனின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள், அவர், தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். தவறினால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதனால் எச்சரிக்கப்படுகிறார்.”

சுவரையே சாய்க்கும் பலம் படைத்த சாமிநாதன், சுவரிலேயே சாய்ந்தான். கண்கள் பொய்யா? காகிதம் பொய்யா?