பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சமுத்திரக் கதைகள்


என்று மூளைக்குள் ஒரு பட்டிமன்றம். ஆனாலும், பொய்யில்லை; மெய்தான் என்று கட்புலன் மூளைக்குச் சொல்கிறது. கிழே அதே அசோகச் சக்கர அதிகாரி கையொப்பமிட்டிருக்கிறார். கோணல் மாணலான கையெழுத்து. அதற்குக் கீழே, அடைப்புக் குறிக்குள் அவரது பெயர் பெரிய எழுத்துக்களில் டைப் அடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் கிழே, அவரது பதவி முத்திரை. தமிழக அரசின் இன்னொரு தனி முத்திரை.

காதும் காதும் வைத்ததுபோல் வந்திருந்த அந்த மெமோவை, சாமிநாதன் பகிரங்கப் படுத்தினான். ஒரு பைத்தியம் வீறிட்டு படிப்பதுபோல் படித்துவிட்டு, பெருமாளை நோக்கி, “பார்த்திங்களா ஸார்... பார்த்திங்களா...” என்று முதல் தடவையாக ‘ஸார் போட்டுவிட்டு, தொப்பியை எடுத்து துரே வீசினான். லத்தியை மேஜையில் போட்டான். அவன் கை இடுப்புக்குப் போனபோது, பெருமாள் அவன் கையைத் திருகி, பேண்டின் பக்கவாட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். அவனை, அப்படியே நிமிர வைத்துவிட்டு, போலீஸ் தர்மத்தை உபதேசித்தார்.

“இது, எல்லா அதிகாரிகளும், தனக்கு விசுவாசமாய் இருக்கிறவங்களுக்கு திட்டமிட்டே கொடுக்கிற பரிசுப்பா... உனக்கும் அவருக்கும் இருக்கிற உறவு, நாளைக்கு மொட்டை மனுவாயோ அல்லது பத்திரிகை மூலமாகவோ வெளிப்பட்டால், அவன் எனக்கு எந்தவிதத்திலும் வேண்டியவன் இல்லை. முன்னாலேயே மெமோ கொடுத்திருக்கிறேன் பாருங்க... என்று சொல்வதற்கான பாவலாதான் இந்த மெமோ. நீ அவரிடமே கேட்டால், சும்மா ஒப்புக்கு கொடுத்தேன். இது ரிக்கார்டுல இருக்காதுன்னு மழுப்புவார்.”

“இனிமேல் அவனுக்கு மாமூல் வதுலிச்சு கொடுக்க மாட்டேன்.”

“உன்னால முடியாது தம்பி... நீ மட்டும் சப்ளை அண்டு சர்வீஸ் செய்யலன்னா, உன் கடமையில இருக்கிற ஒட்டைகளை பெரிசாக்கி, உன்னை, அவர் சஸ்பெண்ட் கூட செய்யலாம்."