பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IX

மனுஷியின் மற்றொரு வரலாற்று முகம் ஒரு பெண் அடிமை அல்லது தெய்வம் ஆகலாமேயன்றி, ஒருபோதும் சகமனிதராக ஆண்களால் கருதப்படுவதில்லை. ஒரு அடிமை தொட்ட மாத்திரத்தின் எஜமானியான ஒரு பெண்கூட அடிமையாகிவிடுகிறார் பெண்களைப் பொருத்தமட்டில் சாதிச் சுவர்கள் எவ்வளவு சன்னமானவையாக உள்ளன:

பாருக்குட்டிகளும் இசக்கிமாடத்திகளும் அல்லாடி, தள்ளாடி’ நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பாரிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் - முகம் தெரியாத மனுஷியை வாசிக்கவும்.

‘மக்கள் பத்திரிகையில் வந்த கிண்டி ரேஸ் பற்றிய செய்தி ஏழை மாடசாமிக்கு வண்ணக் கனவுகளை உருவாக்க, குதிரையாட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது குடும்பத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாக மாடசாமியின் ஊர்வலம் சொல்கிறது. 1976-இல் தொடங்கிய மாடசாமிகளின் ஊர்வலம் இன்றைக்கும் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பத்திரிக்கைகளுக்குப் பதிலாக மக்கள் தொலைக்காட்சிகள்; பிரபல பத்திரிக்கைகளைவிட, சில இலக்கியப் பிதாமகர்களின் சிறு (இலக்கிய) பத்திரிக்கைகள்; அரசு நடத்தும் லாட்டரி திட்டங்கள்; சினிமாக் கனவுகள்; உலகவங்கிக் கடன்கள்...

சற்று எக்குத்தப்பான உரையாடல்கள் விரவிய மனிதநேயக் கதை முதுகில் பாயாத அம்புகள். சீனியம்மாவும் சக்கரையம்மாவும் பப்பாளிக் கொப்பை முன்னிட்டுச் சண்டையில் இறங்குகிறார்கள். இவர்களுக்கிடையில் ராசகுமாரி - புதிதாக வந்த சீனியம்மாவின் மருமகள். ராசகுமாரி திருமணத்துக்கு முன்பே கருச்சிதைவு செய்துகொண்ட விஷயம் எதிராளி சக்கரையம்மாவுக்குத் தெரியும், சீனியம்மாவுக்குத் தெரியாது. சண்டை உச்சத்தை நெருங்குகிறது. ராசகுமாரிக்குத் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் “நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்; குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால். துளிர்த்துவார