பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகைக் கல்

95


அன்றும், ஆயா, ஒரு நிமிடம் நினைவற்றவளாய் கிடந்தாள். மனமற்றுப்போன அருவ நிலை. ஆனால் எங்கயோ விலகி நின்ற அவள் மனம் மறுநிமிடம் தலைக்குள் பால் லாரியாக ஓடியது. நெஞ்சுக்குள் ஆவின் பாலாக பெருக்கெடுத்தது. கசிந்த உறைகளாக பயமுறுத்தியது. முன்னெச்சரிக்கை அவள் உடலைத் துக்கி ட’ வடிவில் மடித்து வைத்தது.

பக்கத்திற்கு ஒன்றாக இரண்டடுக்காய் தோன்றும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தளத்திற்கு இட்டுச் செல்லும் வலது பக்க ஏணிப்படிக்கு கீழ் உள்ள பொந்தில் இருந்து, ஆயா வெளிப்பட்டாள். கிழ் தளத்தில் உள்ள இரண்டு வீட்டுக்காரர்களும் வீசிப் போட்டிருந்த பிய்ந்து போன கார் டயர், சைக்கிள் டியூப், ஒயர் கம்பிகள், அறுந்துபோன கயிறுகள், கிழிந்து போன துணிகள், துருப்பிடித்த ஆணிகள், நைய்ந்து போன சூட்கேஸ்கள், வேலைக்காரப் பெண்கள் விட்டுவிட்டு போகும் துடைப்பங்கள் போன்றவற்றுடன், தட்டு முட்டுச் சாமானாக படுத்தெழுந்த ஆயா, இப்போது தவழ்ந்து தவழ்ந்து அந்தப் பொந்துக்கு வெளியே வந்தாள். குனிந்தபடியே உள்ளே கையை நீட்டி தலையணையாகிப் போன சைக்கிள் டியூப்பை, அந்த இருளில் ஒரு அனுமானத்தோடு தொட்டு, ஒரு ஒரமாக தள்ளிவிட்டாள். பள்ளி கொள்வதற்கு படுக்கையான கோணிப்பையைச் சுருட்டி எதிர்ப்பக்கமாக வைத்தாள். ஒரு திருப்தியோடு தலையை மேலும் கிழுமாக ஆட்டிக் கொண்டே எழுந்தாள்.

பின்னர், எழுந்த வேகத்திலேயே, அந்தத் திண்ணைப் பகுதி போன்ற இடத்திலிருந்து வெளியே வந்து, அந்த வளாகத்தின் ஒரு ஒரமாக உள்ள கைப்பம்பை கத்த விட்டபோது, அது இரும்புத் துகள்களோடு கண்ணிர் சுரந்தது. கிட்டத்தட்ட ஒபாரிப் போன்ற சத்தத்தை எழுப்பியது. அப்போது பார்த்து அண்டை வீட்டு, சேவல் ஒன்று கூவியது... கோழிப்பண்ணை நடத்துகிற ஒருவர் கொண்டுவந்துள்ள வி தவிதமான சேவல்களில் இது ஒரு சமயோசித சேவல். பொழுது விடிந்ததென்று கூவுகிறதோ இல்லையோ, ஆயாவின் காலடிச் சத்தமும், பைப் சத்தமும் கேட்டு