பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

அகலிகைக் கல்

95


இரண்டு மாடிகளை எப்படி கடப்பது என்று அண்ணாந்து பார்த்தாள். யோசித்தபோது, பழைய நினைவுகள் மலர்ந்தன.

அந்த மாடிப் படிக்கட்டு போய், திருக்கழுக்குன்ற மலைப் படிக்கட்டுகள் தரிசனம் தந்தன. அந்த மலைக்கோயிலுக்கு, அவள் போனபோது பிள்ளைத்தாச்சி. பத்தாண்டுகாலமாக உருவாகாத பிள்ளை, வேண்டுதலின் பேரில் கருவானதாய் நினைத்தவள். அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அப்போதைய இளம்பெண்ணான இந்த ஆயாவும், அவள் கணவனும், திருக்கழுக்குன்ற மலைப்படிகளில் ஏறியபோது, இவளால் வயிற்றுச் சுமையோடு எளிதாக ஏறமுடியவில்லை. உடனே, இவள் ஆம்படையான், அந்த படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த குருக்களைச் சுட்டிக் காட்டினார். இவளைப் போலவே வயிறு துருத்திய குருக்கள், ஒவ்வொரு படிக்கட்டிலும் நேராக நடந்து அதன் ஒரத்தில் மறுபடிக்கு ஏறி, பின்னர் எதிர்பக்கமாக நடந்தார்கள்... இப்படி அவர்கள் ஏறுவது தெரியாமல் எஸ் வடிவத்தில் நடந்ததை சுட்டிக் காட்டினார். இவளும் அப்படியே நடந்தாள். கணவனின் தோளில் கை போட்டிருந்ததால் களைப்பு வந்தாலும், இளைப்பு வரவில்லை.

ஆயா, இந்த மல்லிகை வாசனை நினைவுகளோடு இரண்டாவது மாடி தளத்திற்கு வந்து விட்டாள். சிறிது நின்று மூச்சு விட்டாள். உடனயே அவளுள் எழுந்த அந்த மல்லிகை வாசனை, துர்வாசனை ஆயிற்று.

அவளை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போனவன் அதற்குபிறகு ஏழெட்டு ஆண்டுகளில் ஆயாவிற்கு கோவிலாகிவிட்டான். அவனைப் போலவே முகத்தோற்றம் கொண்டவளும், குல தெய்வமான கடல் தெய்வத்தின் பெயர் வைக்கப்பட்டவளுமான, மகள் மச்சகாந்தியை ஒரு துாசுபடாமல் வளர்ப்பதற்காக, கடலோர ஏலத்தில் மீன் வாங்கி, சாலையில் கூறுபோட்டு விற்றது, மீன் வாடிக்கையாளரான ஒரு அதிகாரி மூலம், குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கிடைத்தது, அதே வீட்டில் ஒரு படித்த பையனுக்கு தன் மகளை கட்டிவைத்து வீட்டோடு