பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

சமுத்திரக் கதைகள்


கலந்தவுடன், அதை அவனுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒருமனி நேரத்திற்கு, அவனை நோண்டக் கூடாதாம்.

மறுநாளுக்கு மறுநாள் ஆயாவை பார்த்த அந்தப்பெண் கவிதா நாணிச்க் கோணிச் சிரித்தாள். ஆயா அவளை கண்ணால் கேட்டபோது “இப்ப எல்லாம் அவரு என்னை திரும்பி படுக்க விடமாட்டேங்காரு” என்றாள் சிரிப்பும் கும்மாளமுமாய்.

ஆயா, மீண்டும் அந்த சுவிட்சை தொடப்போனாள். ஆனாலும் ஒரு தடங்கல். யோசித்துப் பார்த்தாள். நேற்று பெய்த மழையில் இளம்பனி வீசும் நேரமிது. அவளுக்கு தெரிந்து அதுதான் அதற்கு இதமான வேளை. இந்தச் சமயத்தில் அந்த சின்னஞ்சிறிசுகளின் தூக்கத்தைக் கலைப்பது, கருவை கலைப்பது மாதிரி. ஆனாலும், நேரம் கரைஞ்சிகிட்டே போகுதே. அந்தப் பாழாப் போற லாரி ரெண்டரையிலிருந்து காலை அஞ்சு மணிக்குள்ள எப்ப வேணுமுன்னாலும் வரலாமே... இதே மாதிரி பகல் பன்னிரெண்டு மணியிலிருந்து மூணு மணி வரைக்கும் எந்த நிமிசத்துலயும் வரலாம். வரும்போது இல்லாட்டி ஏடாகூடமா நடந்துரும். இந்நேரம் ஒருவேள, அது வந்துட்டுப் போயிருக்கலாமே. என்ன பண்ணலாம்.

ஆயா பதைபதைத்தாள். படபடத்தாள். வலது கையை சுவரை நோக்கி நீட்டுவதும், நீட்டிய கையை மடக்குவதமாக அல்லாடினாள். அதற்குள் அண்டைவீட்டின் இன்னொரு சேவல் கூவிவிட்டது. அது புதிய வரவான வெள்ளைச் சேவல். நீட்டி முழக்கி கூவாமல். கட்டு அண்ட் ரைட்டாக கூவக் கூடியது. அடக் கடவுளே! இந்நேரம் பால் வந்திருக்க வேண்டுமே. இல்லாட்டி, அந்த சேவல் இப்போ கூவாதே.

ஆயா, ஆபத்துக்கு பாவமில்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, அழைப்புமணி படம் போட்ட நீண்ட சுவிட்சை விரலால் தொட்டுவிட்டாள். அதற்குள் உள்ளே இருந்து செல்லமான சிணுங்கல்கள் கேட்டன. விடாப்பிடியும், கொடாப்பிடியுமான உறவுப் பிடிகளின் உரசல் சத்தங்கள் சன்னசன்னமாய் கூடி ஒருமையாய்-கலவையான வலுத்துப் போன முக்கல் முனங்கல்கள். ஆயாவிற்கே வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு கணம்தான்...