பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகைக் கல்

107


ஆயா, தனக்குள்ளே புலம்பிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். மனதுக்குள் கோவிலாகிப் போன கணவனை நினைத்தாள். மகளாகப் பிறந்த மசச்காந்தியை திட்டினாள். மாப்பிளையாகிப் போன அடாவடி பயலை சபித்தாள் முட்டைப்பால் கவிதாவையும் திட்டப்போனாள். ஆனால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். இந்தச் சமயத்துல ஏற்படுற வயித்தெறிச்சல் அந்த சின்னஞ்சிறிசை ஏதாவது செய்துடக்கூடாது.

டிப்போக்காரனுக்கு, ஒருவேளை இறக்கம் வந்ததோ என்னமோ... ஒரு வேளை அதோ வருகிற அந்த லாரி டிரைவரிடம் அவள் போட்டுக் கொடுத்துடக்கூடாது என்று நினைத்தானோ என்னமோ... கருணைப் பரவசமாய் ஆயாவுக்கு அறிவுரை சொன்னாள்.

“சரி ஒன் கார்டுங்கள நான் கேக்கல. போய்த் தொலை. சும்மா பினாத்திட்டு நிக்காதே. அதோ பால் லாரி வருது. டிரைவர் வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாளிங்க வராங்களாம். ஒன் பாலுல இன்னும் ரெண்டு லிட்டர் போயிடும். சிக்கிரமா காலிபண்ணு.”

ஆயா, அந்த பாத்திரத்தை இழுத்து தலையில் துக்கப்போன போது, லாரி நெருங்கி விட்டது. எதிர்ப்பக்கம் போனாலும் வம்பு... லாரிப் பக்கம் போனாலும் வம்பு... என்ன செய்யலாம் என்று யோசித்தவளின் தலைக்குகையில் மங்கியதோர் வெளிச்சம்... உடனே அவள் சாலையில் இருந்து ஒரு பொந்தை காட்டியபடியே சிறிது துக்கலாக உள்ள பிளாட்பாரத்தில் அந்த பாத்திரத்தை எடுத்து வைத்து அதை தரதரவென்று இழுத்து இழுத்து டிப்போவுக்கு பின்னால் வைத்து விட்டு அவளும் அங்கே ஒளிந்து கொண்டாள்.

எதிர்ப்புறம் உள்ள பச்சை இலைமயப் பின்னணியில் மஞ்சள் பூ கொத்துகளை சரவிளக்குகளாய் காட்டிக் கொண்டிருந் வாகை மரத்தில் ஆயாவிற்காக காத்திருந்த காகங்களுக்கு அவளை காணாததில் ஏமாற்றம். அந்த இளைத்த கிழவியிடம் மட்டுமே தலைக்கு மேல் பறந்து, பாத்திர விளிம்புகளில் தைரியமாக