பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடைசியர்கள்

முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான்.

சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த லுங்கியோடு திறந்தவெளி மார்போடு, கைகால்களை விரித்துப் போட்டு மல்லாக்க கிடப்பவன். மின்காற்று வீச்சில், நாற்றங்கால் போன்ற தலைமுடிக் கற்றைகளும், மார்பில் பதியமான மென்முடிகளும் பனித்திவலைகளோடு அசைந்தாடுவதில் சுகம் காண்பவன். சொந்த அம்மாவை விட, அந்த மின்னம்மா, தலையைக் கோதிவிட்டு, கன்னத்தை வருடிவிட்டு, கழுத்தை நீவி விட்டு, மார்பை தடவி விடுவது போன்ற அனுமான சுகவாசி...

இப்போதோ, முட்டிக்கால்களை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு அந்தப் போர்வையில் நடுப்பகுதியை மத்தளம் போல் காட்ட வைத்து சர்வம் மாயா மயமாக படுத்திருந்தான்.

அப்படியும், எண்ண அலைகளை, உடம்பை போல் முடக்க முடியவில்லை. அவை சுருண்டு போவதற்கு பதிலாக சுழன்றன. நினைவுகள் வரிசைப்படி வராமல், முன்னும் பின்னுமாய் தாறுமாறாய் ஆட்டிப் படைத்தன. அத்தனையும் மாயா நினைவுகளே. பெற்றெடுத்த அம்மாவோ, பிறப்பித்த தந்தையோ, உடன் பிறந்த தங்கையோ, அவன் மனதிற்குள் மூச்சுக்கூட விடவில்லை. மாயா... மாயா... மாயா மட்டுமே. அவள், அவன் உருவத்திற்குள் உச்சி முதல் பாதம் வரை அருவமாக படருகிறாள். பின்னர், இவனை அருவமாக்கி, அவன் உடல் முழுவதும் உருவமாகி, அவனை உட்கொள்கிறாள். இப்படி ஒட்டு மொத்தமாக