பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சமுத்திரக் கதைகள்


‘என்னை அறியாமலே இப்படி ஆயிட்டினே சித்தப்பா... ஆக்கிட்டாள்ே சித்தப்பா... எல்லார் கண்ணுக்கும் கேவலமா போயிட்டேனே...’

சித்தப்பா, அவனை தூக்கி நிறுத்தி, சொந்தக் காலில் நிற்க வைத்தார். பிறகு அவனை பழைய பதினைந்து வயது சிறுவனாக்கி, தன்னை இருபதைந்து வயது இளைஞனாக்கி அதே பழைய குரலில் அதட்டலும், அன்பும் கலக்க பேசினார்.

இந்தா பாருடா முத்து.! நீ கேவலமா ஆகிடவும் இல்ல. காதலும் கேவலம் இல்ல... அது நம்ம சங்கப் பாடல் சொல்வது மாதிரி வானை விட பெரியது. கொடுக்கத் தெரிந்தது. எடுக்க தெரியாதது. நடப்பதை நம்பாமல், நம்புவதை நடப்பதாக நினைத்து முட்டாளின் சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் ஒருவரை கொண்டுபோய் போடுவது இந்தக் காதல். அதனால இப்படி ஆனதுக்கு, நீ இப்போதைக்கு வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. புறப்படுடா! காலாற நடந்துட்டு வருவோம். நடக்கும்போதே உன் காதல் கதையை சொல்லு... யார் கண்டா? அந்த கதைக்குள்ளேயே ஒரு தீர்வு இருக்கலாம்.’

‘நான் நடக்கிற நிலையில இல்லையே சித்தப்பா. ”

‘உன்னை நான் நடக்க வைக்கிறேன்.’

என்றாலும், முத்துக்குமார் சித்தப்பாவின் பேச்சை பொருட்படுத்தாதது போல் நின்ற இடத்திலேயே நெடுமரமாய் நின்றபோது,சித்தப்பா அவன் தோளில் கை போட்டபடியே அறிவுரையாய் பேசினார்.

நீ இப்படி முடங்கியாதலேயே நம்ம குடும்பமும் முடங்கிக் கிடக்கிறது தெரியுமாடா? அம்மா துடிக்கிற துடிப்பு, உன் துடிப்பு ஆகாட்டால்... அப்பாவோட தவிப்பு, உன் தவிப்பு ஆகாட்டால்... அண்ணன் பழைய நிலைக்கு வந்த பிறகுதான் தனக்கு கல்யாணம் நடக்கணுமுன்னு நிச்சயித்த திருமண தேதியை தள்ளி வைக்கச் சொல்லும் உன் தங்கை திலகாவின் பாசம், உன் மனசுல தைக்காட்டால், நீ என்னடா மனுஷன்? சரி... நானாவது வாக்கிங் போயிட்டு வரேன்.'