பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

115


‘இதுல மொத்தம் எட்டு நாயுங்க இருக்குது. இதுல அதோ ஒடுது பாரு அதுதான் பெண்நாய். மீதி எல்லாம் ஆண்நாயுங்க. நல்லா பாருடா... அந்த பெண் நாய் அந்த ஏழு நாய்களில், சிறுத்தை நிறத்துல இருக்குது பாரு அந்த நாய்... அது நிற்கும்போது மட்டுமே நிக்குது. ஒடும்போது மட்டுமே ஒடுது. ஏன்னா, இது காதலிக்கிற ஒரே ஆண்நாய் அதுதான். ஆனால், எல்லா ஆண் நாய்களும் தங்களைதான், அது காதலிக்கிறதா நினைச்சுட்டு ஓடுது பாரு! எந்தப் பெண்நாயும், காதலிக்கிற நாய் மற்ற நாய்களோட போட்டிப்போட முடியாம பின்தங்கினா, ஒரு கட்டம் வரைக்கும் காதல் நாய்க்கு'சலுகைக் கொடுக்கும். பிறகு, கிடைக்கிற நாய்களுல ஒரு நாய தேர்ந்தெடுக்கும். இதுதான் மிருக விதி.’

சித்தப்பா, தான் சொன்னதை நிரூபிப்பது போல் கிழே குனிந்து ஒரு மண் கட்டியை எடுத்து நாயக நாய் மீது பட்டும் படாமலும் எறிந்தார். உடனே அந்த நாய், காதலியை துறந்து, குழுவிடமிருந்து விலகி எதிர்ப்பக்கமாய் ஊளையிட்டபடியே ஒடியது. உடனே அந்த பெட்டைநாயும் தன்னைச் சூழ்ந்த இதர நாய்களை குரைத்தும் கடித்தும் அபிமன்யு போல் ஊடுருவியபடியே தனித்தோடிய தனது நாய்க் காதலனை நோக்கி செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியபடியே ஒடியது.

சித்தப்பாவே, இப்போது ஒரு காதலனாய் மாறிப் பேசினார்.

‘எல்லா உயிர்களையும் இரண்டு அடிப்படை அம்சங்களே ஆட்டிப் படைக்குதுடா. ஒன்று, உணவு தேடல்-உண்ணல். இரண்டாவது காதல்-உறவாடல். உணவோ அல்லது அதன் தேடலோ குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடும். ஆனால், இந்த காதல் மட்டும்தான் உடல் முழுவதிலும் உள்ளத்தின் பரப்பிலும் ஊடுருவி நிற்கக் கூடியது.’

‘இப்போதாவது என் பிரச்சனைய புரிஞ்சிட்டிங்களே சித்தப்பா.’

‘புரிஞ்சிக்கிட்டேன். அதோட உனக்குப் புரியவைக்கிறேன். நீ மட்டுந்தான் காதலில் சிக்கியதாய் நினைக்காதே. காதல்

ச. 9.