பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சமுத்திரக் கதைகள்


பார்த்தார். பிறகு அவன் முதுகை தள்ளித் தள்ளி நடக்க வைத்தார். இருவரும் அந்தத் தெருவின் திருப்பு முனைக்கு வந்தார்கள். அந்த குறுக்குத்தெருவை வழிமறித்த பிரதான தெரு அவர்களுக்கு வலிய வந்ததுபோல் தோன்றியது. பச்சை இரவாய் தோற்றங்காட்டிய வாகை மரம், இருள் குடமாய் கவிழ்ந்திருந்தது. திடீரென்று பத்து பதினைந்து காகங்கள் அதன் உச்சியில் இருந்து மேலே எம்புகின்றன. அதே சமயத்தில் அந்த மரக்கிளைகளின் முச்சந்தியில் இருந்து, கலர் பல்பு கண்களோடு ஒரு வெள்ளைப் பூனை கிழ்நோக்கி இறங்குகிறது. எம்பிப் பறந்த காகங்கள் தாழப் பறந்து, இடுக்கி வைத்த நகக்கால்களை நீட்டி, அந்தப் பூனையின் பிடறியில் லாகவமாய் அடிக்கப் போகின்றன. எதிரே ஒரு அசோக மரம் இந்தக் காட்சியை முக்காடு போட்டு பார்க்கிறது. அந்தப் பூனை அந்த மரத்துாரில் இருந்து ஒரு புதருக்குள் குதிக்கிறது. சித்தப்பா மீண்டும் வருணனையாளனாய் ஆகிறார்.

‘பூனைக்கு மணிகட்ட முடியுமோ முடியாதோ. ஆனால் அதுக்காக காத்திருக்காமல் அதை துரத்த முடியுமுன்னு இந்த காகங்கள் காட்டுது பார்.’

முத்துக்குமார் ஒன்றும் புரியாமல் சித்தப்பாவையே பார்க்கிறான். சித்தப்பாவின் ரசனையை மனதிற்குள் சபிக்கிறான். சிறிது நடந்தால், எதிர்ப்பக்கம் ஒரு பங்களா வீட்டு வளாகத்தில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருத்தி, கைப்பம்பை பிடித்து வேகவேகமாய் அடிக்கிறாள். அந்தச் சத்தத்திற்கு அவளது மூச்சே பின்னணி இசையாகிறது. அந்த பம்போடு கிழே குனிகிறாள். மேலே எழும்புகிறாள். வீட்டின் வெளி வெளிச்சத்தில் அவள் துருப்பிடித்த முகம் யந்திரமயமாக மேலும் கீழுமாய் ஆடுகிறது. சத்தம் கேட்டு அங்கே பார்த்த முத்துக்குமார், சித்தப்பாவிடம் மீண்டும் புலம்புகிறான்.

‘வீட்ல இருக்கும் போதாவது பரவாயில்ல சித்தப்பா. ஆபி சுல போயி அவளப் பார்த்த உடனே ஷாக்காயிடுது. அவளுக்கு ஒரு சின்ன இறக்கமாவுது இருக்கட்டுமே. எப்படி எதுவுமே நடக்காதது மாதிரி எல்லார்கிட்டயும் அரட்டை