பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

சமுத்திரக் கதைகள்


இவர்கள் சாலைத் தொழிலாளர்கள். கொதிக்கும் தாரில் கோணிப்பை செருப்புகளோடு, எக்கிய வயிறுகளோடு நிற்பவர்கள். இதோ நீயும் நானும் நடக்கோமே... இதே மாதிரி ஒரு தார்ச்சாலையை எங்கேயோ போடுவதற்காக இங்கயே ஆயத்தமாகிறவர்கள். இவர்கள் அந்தச் சமயத்தில் தவிர எந்த சமயத்திலும் தாங்களை ஆண், பெண் என்று அடையாளப் படுத்தாத மானுடக் கூறுகள்.’

சித்தப்பா! பழையபடியும் கவிஞனாகிட்டிங்க. போலிருக்கே. அவங்க கிடக்காங்க. என் சப்ஜெட்டுக்கு வாங்க சித்தப்பா

சித்தப்பா, அவனை புருவச் சுழிப்பாய் பார்க்கிறார். ஆனாலும், அவன் தோளில் கைபோட்டு நடக்கிறார். ஒருகிலோ மீட்டர் நடந்து, ஒரு சாலை மேட்டுக்கு வந்து விட்டார்கள். எதிரே இன்னொரு கூட்டம். இதில் பெண்கள் கண்ணாடி வளையல்கள் போட்டிருந்தார்கள். குங்குமம், நெற்றிப் பொட்டுகளை மறைத்திருந்தது. வலது கை விரல்கள் மடங்கி தூக்குப் பைகளை பிடித்திருந்தன. ஒரு சிலரின் தலைகளில் பாண்டு கூடைகள், அந்தக் கால போலீஸ் தொப்பிகள் போல் கவிழ்ந்து கிடந்தன. காய்ந்த தலைகளும் உண்டு. பூக்களை வேய்ந்த தலைகளும் உண்டு. வரிசைக் குலையாமல் நடந்தாலும் இதில் அணிவகுப்பு நடையில்லை. சக்திக்கேற்ற நடை. இதனால் ஜோடிகள் மாறுகின்றன. பேச்சுகள் திசை திரும்புகின்றன. சித்தப்பா அந்தக் கூட்டத்தை இவனுக்கு அடையாளப் படுத்துகிறார்.

இவர்கள் சாலை தொழிலாளர்களை விட, ஒரே ஒரு படி மேலான கட்டிடத் தொழிலாளர்கள். இவர்களிலும் மனைவிகளை மேஸ்திரிகளுக்கு பறிகொடுத்த பெரியாட்கள் உண்டு. மேனா மினுக்கிகளிடம், கணவன்களை திருடுகொடுத்த சித்தாள் பெண்களும் உண்டு. இந்த காதல் மாறாட்டத்தில் அனாதைகளான சிறுவர் சிறுமிகளும் உண்டு. ஆனாலும் இவர்கள் உள்ளத்தை உழைப்பில் கரைப்பவர்கள். துக்கங்களை, சுண்ணாம்பு கலவைகளாய் ஆக்குகிறவர்கள். சாரப்படிகளில் ஏறி ஏறி, மனப்பாரங்களை இறக்குகிறவர்கள். இவர்களுக்கு சாரங்களில் ஏறுவது நரகமென்றால், சமதளத்திற்கு வருவது சொர்க்கம். உழைப்பையே சொர்க்கமாகவும், நரகமாகவும் ஆக்கிக் கொண்ட கூட்டம்.'