பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சமுத்திரக் கதைகள்


உள்ளும் வெளியேயும் வெள்ளை கத்தாழைகள் போல் சுளைகள்... இரத்தச் சதைகள் போன்ற தர்கிஸ் பழக் குவியல்கள். அருகிலேயே அரிவாளை சுமக்கும் தேங்காய் குவியல்கள். ‘சூடு வைப்பியா என்று கிண்டலும், கேலியுமாய் கேட்கும் ஒரு குடும்பத்தை பின்னிருக்கையில் அமர வைத்து ஆட்டோவை முழங்க வைக்கும் டிரைவர்... எங்கு நோக்கினும் இயக்க நிலை....

அத்தனை பேரையும், அத்தனையையும் கடந்து, சித்தப்பாவும், முத்துக்குமாரும் வீடு இருக்கும் குறுக்குத் தெருவிற்கு மீண்டும் வருகிறார்கள். சித்தப்பாவின் புருவங்கள் ஆச்சரியமாய் உயர்ந்து, விழிகளை மேலிழுக்கின்றன. முன்பு பார்த்த அந்த பெட்டைநாய் இப்போது இன்னொரு தடிநாயோடு இணைந்திருக்கிறது. உடலால் பிரிக்க முடியாத இணைப்பு. இந்த நாய் காதலித்த சிறுத்தை நிற நாயோ, வேறொரு பக்கம் ஒரு நாய்க்குட்டியோடு விளையாடி கொண்டிருக்கிறது. நாய்க்குட்டி நான்கு கால்களையும் மேலே தூக்கி கழுத்தை வளைக்கிறது. சிறுத்தைநாய், குட்டியை பொய்கடியாய் கடிக்கிறது.

சித்தப்பா முத்துக்குமாரை பார்க்காமலே சலிப்போடு பேசுகிறார்.

‘இந்த நாய்களுக்கு இருக்கிற அணுகுமுறைகூட மனுசனுக்கு

முத்துக்குமார், சித்தப்பாவை திகைத்துப் பார்க்கிறான். அவர் ஏன் அப்படி தன்னிடம் பாராமுகமாய் ஆனார் என்பதை அறிந்து கொள்ள பார்க்கிறான். இணைந்த அந்த நாய்களையும், இணையாமல் போன நாயக நாயையும் அழுத்தமாய் பார்க்கிறான். ஏதோ ஒன்று தட்டுப்படுகிறது. கூடவே, மாயாவின் நினைப்பும் வந்ததால், அந்த தட்டுப்படல், தட்டுப்பாடாகிறது.

இந்தச் சமயத்தில், இருவரும், வீட்டை நெருங்க போகிறார்கள். அவர்களை வழிமறிப்பது போல் ஒரு பையன் இடைச்செறுகலாய் சைக்கிளோடு வந்து நிற்கிறான். அந்த சைக்கிளின் கேரியரில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்றையும், முன்னால்