பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

127


சுற்றி முடிச்சுகளாயின. எல்லாவற்றிற்கும் மேலாக, அவனது வாய்க்குள் கெட்டியான பஞ்சு சொருகப் பட்டிருந்தது. இதனால், அவனுக்கு உதட்டோரங்களிலும் வெள்ளை நாக்குகள் முளைத்திருப்பது போன்ற கண்காட்சி. போதாக்குறைக்கு, முன் கழுத்தை மறைத்த தாடி. பின் கழுத்தை மூடிய பிடரி.

தொளதொளப்பாய்ப் போன லுங்கியும் சட்டையுமாய் கிடந்த பன்னீரின் பார்வை படும் வகையில், குழுவினர் ஒரு பள்ளத்தை எட்டிப் பார்ப்பதுபோல், கண்களைத் தாழ்த்தினார்கள். அப்போது பன்னீரின் கண்கள், ஒன்றை ஒன்று நெருக்கப்போவதுபோல், மூக்குப் பக்கமாய் சுழன்றன. வயிற்றைச் சுற்றிய ரப்பர் பேண்ட் வளைந்து கொடுத்தது. வாய்க்குள் திணித்த பஞ்சுத் துண்டு, மெல்ல அசைந்தது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.

ஒரு “நல்ல கேஸை கண்டுபிடித்த திருப்தியோடும், இதை எப்படி பரபரப்பான செய்தியாக்கலாம் என்ற பப்ளிசிட்டி சிந்தனையோடும், உறுப்பினர்கள் அவனை போட்டி போட்டு பார்த்தபோது, கூட்டம் கூடிவிட்டது. பட்டப்பகல் என்பதால், வேலைக்கு போகமுடியாத பாட்டிகள், தாத்தாக்கள், அவர்களின் பேர பேத்திகள், நோயாளிகள், பெண்டாட்டிகளின் உழைப்பில் வாழும் குடும்ப தாதாக்கள் என்று கலப்படக் கூட்டம்.

சல்வார் காமீஸ் “சமூக இயல் பாப்பம்மா, கூட்டத்தை ஒரே நோக்காய் பார்த்து, தனது இளவயது துணிச்சலில் ஒரே மூச்சாய் கேட்டாள்.

“என்ன அநியாயம் இது? எந்த சமூகத்துரோகி செய்த வேலை? மயானபுத்திரனுக்கு காவு கொடுக்கிற பிக்கை அதான் பன்றியை கூட இப்படி கிடத்த IDITLLTGor! சொல்லுங்கய்யா... சொல்லுங்கம்மா... வாயில புண்ணாக்கா வச்சிருக்கிங்க...? ஏன் ஊமையாயிட்டீங்க?”

பாப்பம்மா, தென்பாண்டித்தமிழில் கேட்டபோது, கூட்டத்தினர் வாய்கள் புண்ணானதுபோல், அவற்றை அசைக்காமல் வைத்திருந்தனர். அவள் மட்டும் என்றால், உப்பு வைத்து ஊற வைத்திருப்பார்கள். கூடவே காக்கி யூனிபாரம் நிற்கிறதே...